தமிழக காட்டுயிர்ச் சரணாலயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓரிடத்தில் உள்ள அரிய அல்லது அபாயத்திற்குள்ளான உயிரனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அது வாழும் இயற்கையான சூழல் சரணாலயமாக அங்கீகரிக்கப்படுகிறது. தமிழகத்தின் காட்டுயிர்ச் சரணாலயங்கள்:[1]

 1. முதுமலை சரணாலயம் - 217.76 ச.கி.மீ. - நீலகிரி மாவட்டம்.
 2. கோடியக்கரை சரணாலயம் - 17.26 ச.கி.மீ. - நாகப்பட்டினம் மாவட்டம்.
 3. களக்காடு காட்டுயிர் சரணாலயம் - - திருநெல்வேலி மாவட்டம். 1962 ஆம் ஆண்டு, களக்காடு புலிகள் சரணாலயமும் (251 சதுர கிலோ மீட்டர்கள்), முண்டந்துறை புலிகள் சரணாலயமும் (567 சதுர கிலோமீட்டர்கள்) உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், இந்த இருசரணாலயங்களையும் ஒன்றிணைந்து, இக்காப்பகம் உருவாக்கப்பட்டது.
 4. இந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் - 850 ச.கி.மீ. - கோயம்புத்தூர் மாவட்டம்.
 5. வல்லநாடு வெளிமான் சரணாலயம் - 16.41 ச.கி.மீ. - தூத்துக்குடி மாவட்டம்.
 6. திருவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம் - 485.2 ச.கி.மீ. - விருதுநகர் மாவட்டம்.
 7. கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயம் - 402.39 ச.கி.மீ. - கன்னியாகுமரி மாவட்டம்.
 8. கொடைக்கானல் காட்டுயிர் சரணாலயம் - 608.95 ச.கி.மீ. - திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டம்.
 9. கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் - 2.88 ச.கி.மீ. - திருநெல்வேலி மாவட்டம்.
 10. காவேரி வடக்கு காட்டுயிர் சரணாலயம் - 504.33 ச.கி.மீ. - கிருட்டிணகிரி மற்றும் தருமபுரி மாவட்டம்.
 11. சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்
 12. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் -திருவாரூர் மாவட்டம்

மேற்கோள்கள்[தொகு]

 1. மனோரமா இயர் புக் 2015. மலையாள மனோரமா. 2015. பக். 178,194.