தமிழகப் பள்ளிகளில் தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகப் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறையே தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை (கிரேடு முறை) எனப்படும். 2012-13 கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரை தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளிலும் இந்த தரப்படுத்தல் முறை கிரேடு முறை அமலுக்கு வரவுள்ளது. இதற்கான ஆணையை தமிழக அரசு பிரப்பித்துள்ளது.

மூன்று பருவங்கள்[தொகு]

ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. முப்பருவ முறையும் 2012-13 கல்வியாண்டில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பருவம்[தொகு]

சூன் முதல் செப்டம்பர் வரை

இரண்டாம் பருவம்[தொகு]

அக்டோபர் முதல் டிசம்பர் வரை

மூன்றாம் பருவம்[தொகு]

சனவரி முதல் ஏப்ரல் வரை

மதிப்பீடுகள்[தொகு]

மதிப்பீடுகள் உடனடி மதிப்பீடு, பருவ மதிப்பீடு என இரண்டு மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு பருவத்துக்கும் உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்ணும், பருவ இறுதியில் மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

பருவ இறுதியில் நடைபெறும் தேர்வில் 55 முதல் 60 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ஏ1 கிரேடு அளிக்கப்பட்டு 10 புள்ளிகள் வழங்கப்படும். இதுபோல் 49-54 (ஏ2), 43-48 (பி1), 37-42 (பி2), 31-36 (சி1), 25-30 (சி2) என்ற வரிசையில் கிரேடு அளிக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்படும். இதில், 12 மதிப்பெண்களுக்கு கீழே எடுத்திருந்தால் (இ2) கிரேடு மட்டும் வழங்கப்படும். புள்ளிகள் அளிக்கப்படாது. இதே முறை, பருவம் முழுவதும் நடைபெறும் வகுப்பறை தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும்.

வகுப்பறை தேர்வு மற்றும் பருவ இறுதி தேர்வு இரண்டையும் சேர்த்து மொத்த மதிப்பெண் 100 என நிர்ணயித்து, அதன் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். இதுபோன்று, ஒவ்வொரு பருவத்துக்கும் தேர்வு நடத்தப்பட்டு, கிரேடு வழங்கப்படும்.

இதில் ஏ கிரேடு எடுத்தால் மிக மிக சிறந்த மாணவன், (பி) கிரேடு மிக சிறந்த மாணவன், (சி) கிரேடு சிறந்த மாணவன், (டி) கிரேடு திருப்திகரம், (இ) கிரேடு திருப்தி இல்லை. இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்படும். ஒரு பருவத்தில் படிக்கும் பாடங்களை அடுத்த பருவத்தில் படிக்க தேவையில்லை