தமிழகத்தை ஆண்ட மரபினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

'தமிழகத்தை ஆண்ட மரபினர்

  *தமிழகம் பல காலங்களில் பலருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.பெரும்பான்மையான காலப்பகுதி சேர, சோழ,பாண்டியர்களின் ஆட்சியாக அமைந்திருந்தது.சிறுபான்மை பிற வமிசத்தினரும் ஆண்டனர்.வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம் சேர,சோழ,பாண்டிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.அவற்றை முறையே சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஆண்டனர்.   

பல்வேறு [ஆட்சி]காலங்கள்[தொகு]

01.சங்க காலம் [கி.மு. 100 --கி.பி.200 ]

02.களப்பிரர் காலம் [கி.பி.200--600 ]

03.பல்லவர் காலம் [கி.பி.300--900]

04.சோழப்பேரரசு [கி.பி.900 --1250 ]

05.பாண்டியர் காலம் [கி.பி.1250--1350 ]

06.நாயக்கர் ஆட்சி [கி.பி.1350--1750 ]

07.ஐரோப்பியர்கள் ஆட்சி கி.பி.[1750--1947]

சேரர்[தொகு]

  கொச்சி,குடகு,மலையாளம்,திருவிதாங்கூர் உள்ளிட்ட பகுதிகள் சேர நாடு என அக்காலத்தில் வழங்கப்பட்டன,இக் காலத்தில் வழங்கும் பெயர், கேரளம்.

சேரர்களின் இலாஞ்சனை,வில்.அடையாளமாலை பனத்தோடு,தலைநகர் வஞ்சி .துறைமுகப்பட்டினங்கள் தொண்டி,முசிறி.விளைபொருள்கள்:மிளகு,யானை தந்தங்கள்,குடகடல் பவளம்,நறுமணப்பொருள்கள்.சிறப்பிக்கும் இலக்கியங்கள்:

சிறப்பிக்கும் இலக்கியங்கள்: பதிற்றுப்பத்து,சிலப்பதிகார வஞ்சிக்காண்டம்.

சிறந்த நகரங்கள் : நறவு,கொடுமணம்,கருவூர்,பந்தர்,மாந்தை,விழிஞம்.சோழர்[தொகு]

  'சோழ வள நாடு சோறுடைத்து, எனப் பாராட்டப்பெற்ற புனல் நாட்டை ஆண்டவர்கள் சோழப்பேரரசர்கள்.வற்றாது பெருகும் மலைத் தலைய கடற்காவிரி பாய்ந்து வளங்கொழிப்பதால்,சோழ நாடு 'புனல் நாடு'என்று வழங்கப்படுகிறது.சோழர்கள் வளவர்கள்,வளவர் எனப்பட்டனர்.இவர்களுக்கு செம்பியன்,கிள்ளி,சென்னி என்னும் பெயர்களும் உண்டு.சோழரி இலாஞ்சனை,புலி,அடையாள மாலை ஆத்தி: தலைநகரம்:உறையூர். துறைமுகப்பட்டினங்கள் பூம்புகார்,நாகை.


பாண்டியர்கள்[தொகு]

  பாண்டியரின் தலைநகர் மதுரை.சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கு உண்டு.வையை,தாமிராபரணி போன்ற ஆறுகளால் வளம் பெறுவது பாண்டிய நாடு.பாண்டியரின் இலச்சினை மீன். அடையாள மாலை வேம்பு.சிறப்பிக்கும் இலக்கியங்கள் மதுரைக்காஞ்சி,நெடுநல்வாடை,திருவிளையாடற்புராணம்.

[1] பகுப்பு:இலக்கியங்கள்

பகுப்பு:மன்னர்கள்

பகுப்பு:ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்.

 1. தமிழ்ப் பேழை டாக்டர்.ஆறு.அழகப்பன்