தமிழகத்தில் பண்டைய ரோமின் காசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழகத்தில் கிடைத்த தங்க ரோமக் காசுகள்
தமிழகத்தில் கிடைத்த ரோமக் காசுகள்

தமிழகத்தில் கிடைத்த ரோம நாட்டு நாணயங்களின் கிமு 200 முதல் கிபி 200 வரை மதிக்கத்தக்கதாக உள்ளன. தமிழகத்தில் இவற்றின் பரவல் சென்னை மாம்பலம் முதல் திருநெல்வேலி வரை புழக்கத்தில் உள்ளது.

மன்னர்கள்[தொகு]

புதுக்கோட்டையில் கிடைத்த ரோமானிய அகசுடசு மன்னரின் நாணயம்

தமிழக ரோமக் காசுகளில் சில ரோம மன்னர்களின் உருவத்துடன் காணப்படுகிறது. அம்மன்னர்கள்

  1. அகசுடசு - 1932ல் மட்டும் அகசுடசு காசுகள் 121 கண்டுபிடிக்கப்பட்டது.
  2. தைபிரியசு (கிபி 14-37) - 30 ஒளரி காசுகளும் 1856 தினாரி காசுகளும் இதுவரை கண்டெடுக்கப்பட்டுளது.
  3. கலிகுலா (கிபி 54-68)
  4. கிளாடியசு (கிபி 41-54)
  5. நீரோ (கிபி 54 -68) - இதுவரை இம்மன்னனின் 14 வகை காசுகள் கண்டறியப்பட்டுளது.

முக்கியத்துவம்[தொகு]

இந்த ரோமானிய நாணயங்களை ஆராய்ந்தோர் இதற்கு சமமான நாணயங்கள் வேறெங்கும் கிடைக்கப்பெறாததால் இவை வெறும் காசுகளாக மட்டும் பயன்படாமல் திரவியங்களகவும் பெரும் மதிப்புமிக்க பொருட்களாகவும் பயன்பட்டன என அபிப்பிராய படுகின்றனர். இதனாலேயே பெருமளவு நாணயங்கள் குவியல்களாக புதைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். பிளினி என்ற ஆசிரியர் அரை மில்லியன் செசுரர்செசு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது எனக்கூறி, இவ்வாறு தங்கம் ரோமை விட்டு வெளியேறுவது அந்நாட்டின் திரைச்சேரியை பாதிக்கும் என கவலை தெரிவித்ததை வைத்து அக்கால ரோம தமிழக வாணிப தொடர்புகள் எந்தளவுக்கு சிறந்திருந்தது என்பது அறியப்பட்டது.

மூலம்[தொகு]

  • பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.