தமிழகத்தில் சாதவாகனர் காசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழகத்தில் கிடைத்த சாதவாகனர் காசுகள்

சங்ககாலத் தமிழருக்கும் ஆந்திர மன்னர்களான சாதவாகனர்களுக்கும் நல்ல உறவு இருப்பது அவர்கள் வெளியிட்ட காசுகள் அதிகளவு தமிழகத்தில் கிடைத்திருப்பதைக் கொண்டு நிறுவலாம். பொ.மு. 300 - பொ.பி. 300 வரை ஆண்ட இம்மன்னர்கள் வெளியிட்ட பல்வகைக் காசுகள் பெரும்பாலும் ஈயம், செம்பு போன்ற உலோகங்களிலேயே காணப்படுகின்றன. ஆனால் யாகம் செய்யும் போது வெளியிட்ட காசுகள் மட்டும் வெள்ளியில் வெளியிட்டுள்ளனர்.[1] வசிட்டிபுத்திர சிரிபுலுமாவி, வசிட்டிபுத்திர சிவ சிரிபுலுமாவி, வசிட்டிபுத்திர சாதகர்ணி மற்றும் கௌதமி புத்ர சாதகர்ணி போன்ற மன்னர்களின் நாணயங்களே அதிகளவில் உள்ளன.

தமிழ்[தொகு]

மேற்குறிப்பிட்ட அனைத்து மன்னர்களின் நாணயங்களிலும் முன் பக்கத்தில் யானை மற்றும் அம்மன்னனின் தலையும் பின் பக்கத்தில் உச்சயினி குறியீடும் காணப்படும். மன்னனின் தலைப்பகுதியின் ஒரு பக்கம் அவனது பெயர் தமிழிலும் மற்றொரு பக்கத்தில் பிராகிருதத்திலும் காணப்படும். இவற்றில் காணப்படும் தமிழ் எழுத்துகள் மாங்குளம் கல்வெட்டுகளில் உள்ள தமிழ் போல் காணப்படுகிறது.[2]

வார்ப்புக்கூடுகள்[தொகு]

சாதவாகனர் மற்றொரு பெயர் சாலிவாகனன் சாதவாகனர் காசுகள் செய்ய பயன்படுத்திய ஐந்து வார்ப்புக்கூடுகள் தமிழகத்தில் செய்த காஞ்சிபுரம் அகழாய்வில் கிடைத்துள்ளன.[3] இவற்றில் மேற்குறிப்பிட்ட சின்னங்களான மன்னனின் தலை, அவர்களின் பெயர், யானை உருவம் போன்றவற்றை அச்சிடுவதற்கான அச்சுகள் உள்ளன.[4] இவ்வார்ப்புக்கூடுகள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இவை தமிழகத்தில் புழக்கத்தில் விடுவதற்கு தயாரிக்கப்பட்டவையா அல்லது ஆந்திரப் பொருட்களை வாங்குவதற்கு தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டவையா என்று கூற முடியா வண்ணம் உள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Satavahana Silver coinage, Studies in south Indian coins Vol 1, p46
  2. A bilingual Coin of a Satavahana, Seminar on Inscriptions (1966), Dr. N. Nagaswamy, page 202
  3. Select inscriptions, Vol 1, pp 224-226 1986, D.C.Sircar
  4. Teracotta Coin Moulds from Kanchipuram Study of South Indian Coins, Vol 1, pp 26-28
  5. Ibid p-28