தமிழகத்தில் இடைக்கற்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழகத்தில் குறுனிக்கற்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழகத்தில் கிடைத்த குறுனிக்கற்காலக் கருவிகள்[1]

தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது தமிழகத்தில் குறுனிக்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 2,000 வரை நிலவியது.[2] குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேரி என்னும் பகுதியில் இக்கால ஆயுதங்கள் அதிகம் காணப்படுகின்றன.[1]

தேரி[தொகு]

தற்போதும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தேரி என்னும் மணல் மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன.[3] இவற்றில் காணப்படும் செம்மண் படிந்த கருவிகள் காலத்தால் முந்தியவையாகவும் வெண்மண் படிந்த கருவிகள் காலத்தால் பிந்தியவையாகவும் விளங்குகின்றன.[2] இத்தேரியில் இடைக்கற்கால ஆயுதங்கள் சிலவற்றிலும், இடைக்கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகளும் சேர்ந்தும் காணப்படுகின்றன.[1]

பரவல்[தொகு]

இவ்வாயுதங்கள் மேலும் தமிழகத்தில் சில இடங்களில் காணப்படுகின்றன.

  1. திருச்சி மாவட்டம்[4]
  2. மதுரை மாவட்டம் - மதுரை, திருமங்கலம்[5], போடிநாயக்கனூர், கொல்லம்பட்டறை, தாதனோடை மேடு, பெரியகுளம், கல்லுப்பட்டி, சிவரக்கோட்டை, கருவேலம்பட்டி, சென்னப்பட்டி.[6]
  3. தஞ்சாவூர் மாவட்டம்[4]

இந்த ஆயுதங்கள் வடதமிழகத்தில் அதிகம் காணப்படுவதில்லை.

ஓடைகளிலும் இடைக்கற்காலப் பரவல்[தொகு]

தென்காசி நகராட்சியிலுள்ள சிற்றாற்றின் துணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், இடைக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.[7] இதை வைத்து இடைக்கற்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் சிறிய ஓடைகளைச் சுற்றியும் கூட தங்கள் நாகரிகத்தைப் பரவ விட்டிருந்தனர் எனக் கொள்ளலாம்.

இன்று[தொகு]

இன்றும் இக்கால மக்கள் வேடர் (தமிழகம் மற்றும் ஈழம்), இருளர், காடர், காணிக்கார், பழையர், மலைப்பண்டாரம் போன்ற மக்களுள் கலந்து வாழ்கின்றனர் என்பது ஆராய்ச்சியாளர் கூற்று.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 The Microlithic Sites Of Thirunelveli District (1964). Madras State in Ancient India Vol 12. பக். pp 4 - 20. 
  2. 2.0 2.1 Sankalia HD (1974). Pre- and Proto-History of India and pakistan. Poona University. 
  3. Allchin B and Allchin F R (1982). The Rise of Civilization in India and Pakistan. Cambridge University. 
  4. 4.0 4.1 Raman K V (1969). Pre and Proto Historic Culture Of Tamilnadu. பக். pp 137-142. 
  5. Raman K V (1970). Distribution Pattern of Cultural Traits in the Pre and Proto Historic times in Madurai Region. பக். pp 499 - 599. 
  6. குருமூர்த்தி (1974). தொல்பொருளியலும் தமிழர் பண்பாடும். சென்னை. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0I7.TVA_BOK_0002496. 
  7. இந்திய தொல்லியல் துறை. "இந்திய தொல்லியல் துறை வெளியீடு 1988-89". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: மே 17, 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original on 2012-05-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)