தமா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமா
மொத்த மக்கள்தொகை
200,000–300,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சாட்
 சூடான்
மொழி(கள்)
தமா மொழி
சமயங்கள்
இஸ்லாம்

தமா அரேபியர் அல்லாத ஆபிரிக்கா பழங்குடி இனக்குழு மக்கள் ஆவர். இவர்கள் கிழக்கு சாட் மற்றும் மேற்கு சூடான் நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் நிலோ-சகாரா மொழியான தமா மொழியை பேசுகின்றனர். இவர்களின் மக்கள் தொகை சுமார் 2,00,000–3,00,000 ஆகும். இவர்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களாகவும் விவசாய வேலைகளை செய்கின்றனர். சாட் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் (2005-2010) தமா மக்கள் மற்றும் ஜஹாவா மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டது.

மக்கள்[தொகு]

தமா மக்கள் அரேபியர் அல்லாத ஆபிரிக்கா பழங்குடி மக்கள் ஆவர். [1][2][3] இந்த பழங்குடி மக்கள் சாட் நாட்டின் வடகிழக்கு பகுதியான டார் தாமா மற்றும் சூடான் நாட்டின் மேற்கு பகுதியான டர்பர் பகுதிகளில் தங்கள் குடியிருப்புகளை அமைத்து தற்சார்பு வாழ்வாதார விவசாய வேலைகளை செய்து வாழ்கின்றனர்.[1] [4][5][6][7][8] இவர்கள் தினை, அவரை, வெள்ளரி மற்றும் எள் முதலிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.[1] மேலும் அவர்கள் மேய்ச்சல் தொழிலையும் செய்கின்றனர். ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் வளர்த்தல் ஆகும். [6] இவர்களில் பலர் இஸ்லாம் மதத்தை தழுவியவர்கள் ஆவர் இருப்பினும் ஆன்மாவாதம் சார்ந்த நம்பிக்கை உடையவர்கள்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Human Rights Watch, p. 11
  2. "Operational Guidance Note, Republic of the Sudan". UK Border Agency (August 2012). மூல முகவரியிலிருந்து 11 October 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 September 2012.
  3. Rebecca Hamilton (2011). Fighting for Darfur: Public Action and the Struggle to Stop Genocide. Macmillan. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0230100228. https://books.google.com/books?id=5yAsxGzTwEMC&pg=PA13&lpg=PA13&dq=tama+non-arab+african&source=bl&ots=cv-Wnv1exC&sig=BgnfFS08j4vV7jUIQN8Ew2o9jSo&hl=en#v=onepage&q=tama%20non-arab%20african&f=false. 
  4. Anthony Appiah and Henry Louis Gates (2010). Encyclopedia of Africa. Oxford University Press. பக். 454. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0195337700. https://books.google.com/books?id=A0XNvklcqbwC&pg=RA1-PA454&lpg=RA1-PA454&dq=chad+tama+africa&source=bl&ots=Mf3Es3ujYI&sig=LEUGl1euVsVwMMFRi-qSMtubIm4&hl=en&sa=X&ei=qEhNULXXEIyK8QSGx4GwCg&sqi=2&ved=0CCwQ6AEwAA#v=onepage&q=tama&f=false. 
  5. Olson, p. 544
  6. 6.0 6.1 Olson, p. 42
  7. "Darfurian Voices". 24 Hours For Darfur (July 2010). மூல முகவரியிலிருந்து 2011-07-25 அன்று பரணிடப்பட்டது.
  8. 8.0 8.1 "Chad: Tama ethnic group; language; population; political affiliations and rebel group support; traditional lands". Immigration and Refugee Board of Canada (1 November 1998). பார்த்த நாள் 14 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமா_மக்கள்&oldid=2724927" இருந்து மீள்விக்கப்பட்டது