தமாசு டீ குவின்சி (ஆங்கில எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமாசு டீ குவின்சி (15-8-1785 முதல் 08-12-1859 வரை). இவர் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். இலக்கிய விமர்சகர் மற்றம் கட்டுரையாளர்ஃ. 1821-ஆம் வருடம் இவர் எழுதிய 'Confessions of on English Opinion Eater' என்ற கட்டுரை இன்றும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. இவர் மான்செஸ்டர் நகரத்தில் ஓர் புகழ்பெற்ற வியாபரியின் மகனாக பிறந்தார். இவரது தந்தைக்கு இயற்கையாகவே இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டவர். இளவயது தொடங்கியே டீ குவின்சி உடல் நலம் குன்றியராகவும், நோய்வாய்ப்பட்டும் காணப்பட்டார். வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் மற்றும் சாமுவேல் கூல்ரிட்ஜ் எழுதிய 'Prepare to Lyrical Ballades' இவர் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இவருடைய பள்ளி ஆசிரியர் ஒருவர் குவின்சியின் பேச்சாற்றல் ஏத்தன் (Athen) நகரத்து கிளர்ச்சியாளர்களையும் கவர்ந்திழுக்கும் இயல்புடையது என பாராட்டியுள்ளார். 'விளையும் பயிர் முளையிலே' என்ற பழமொழிக்கு இணங்க சிறுவயதிலேயே தன்னொடுத்த மாணவர்களை காட்டிலும் புலமையில் சிறந்து விளங்கினார்.

  இவரது மனைவியின் பெயர் திருமதி. மார்கெரட். இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். போதை மருந்திற்கு (கஞ்சா) அடிமையானதின் விளைவாக பல சமயங்களில் நரம்பு முறிவுக்கு உட்பட்டார். இது இவரது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக இருந்தது. 'London Magazine'  என்ற பத்திரிக்கையில் இவர் எழுதிய கட்டுரைகள் அநேகரது கவனத்தை கவர்ந்திழுந்தது.
  இவரது முக்கியமான படைப்புகள் பின்வருமாறு
  1. Confessions of on English Opinion Eater  (1822)
  2. Revolt of Tartars (1837)
  3. Autobiographical Sketches (1853)