உள்ளடக்கத்துக்குச் செல்

தமயந்தி தாம்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமயந்தி தாம்பே
Damayanti Tambay
தேசியம்இந்தியர்
பணிஇறகுப்பந்தாட்டம்
அறியப்படுவதுவிச்சய் வசந்த் தாம்பே
இறகுப்பந்தாட்டம்
வாழ்க்கைத்
துணை
விச்சய் வசந்த் தாம்பே

தமயந்தி தாம்பே (Damayanti Tambay) இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனையாவார். விமானப்படைத் துணைத்தலைவர் வி. வி. தாம்பேயின் மனைவியாகவும் அறியப்படுகிறார். 1971 இந்திய-பாக்கித்தான் போரில் காணாமல் போன 54 இந்திய பாதுகாப்பு பணியாளர்களில் இவரது கணவரும் ஒருவர். போர் கைதியாக அவர் பாக்கித்தான் நாட்டு காவலில் இருப்பதாக நம்பப்படுகிறது.[1][2]

வாழ்க்கை வரலாறு.

[தொகு]

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாக்கித்தான் போரின்போது, திசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று தாம்பேயின் கணவர் விஜய் வசந்த் தாம்பே, இந்திய ராணுவத்தின் விமானப் படைத் துணைத்தலைவராக பாக்கித்தான் இராணுவத்தால் எதிரியாக கைது செய்யப்பட்டார். இதன் விளைவாக, தாம்பே தனது கணவரையும் மற்ற 46 போர்க் கைதிகளையும் மீண்டும் அழைத்து வர பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை. மேலும் காணாமல் போன அனைத்து வீரர்களும் இறந்துவிட்டனர் என்பது இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகும். 1971ஆம் ஆண்டுக்குள், தமயந்தி தாம்பே தொடர்ச்சியாக மூன்று தேசிய மகளிர் ஒற்றையர் போட்டிகளில் வென்றார். 1971 இந்திய-பாக்கித்தான் போரில் காணாமல் போன 54 பேர் சம்பவத்தில் இவரது கணவர் பிடிபட்டதை அடுத்து, 1971 ஆம் ஆண்டில் தனது 23 வயதில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது கணவரை திரும்பப் பெறாவிட்டால் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியைப் பெறாவிட்டால் இறகுப் பந்தாட்டத்தில் தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்க மாட்டேன் என்று சபதம் எடுத்தார்.[1]

உலகின் முதன்மையான இறகுப்பந்து போட்டியில் 1966 ஆம் ஆண்டு பெண்கள் ஒற்றையர் வெற்றியின் பிரதிநிதியான வெற்றியாளரின் பதக்கம், தமயந்தி தாம்பேயிடம் உள்ளது. இவரது மலர்ந்த வாழ்க்கை 23 வயதில் இவரது சொந்த கைகளால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று முறை தேசிய பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னர் இவர் காணாமல் போன பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் முன்னணி உறுப்பினராக ஆனார். தற்போது சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.[3][4][5][6]

பண்பாட்டில்

[தொகு]

திரைப்படம்

[தொகு]

அகன்சா தாமினி இயோசி இயக்கிய 1971 இந்திய-பாக்கித்தான் போரை மையமாகக் கொண்ட ஒரு குறும்படத்தில் தமயந்தி தாம்பே நடித்திருந்தார். இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டில் இயோசி இயக்கிய குறும்படம் ஆகும். கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக தனது கணவர் திரும்புவதற்காக காத்திருக்கும் தமயந்தி தாம்பேயின் கவலையையும் நம்பிக்கையையும் இத்திரைப்படம் குரல் கொடுக்கிறது.[7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Past Masters of Indian Badminton: Damayanti Tambay's endless wait and a career curtailed by love". Firstpost. 2020-04-03. Retrieved 2021-04-14.
  2. "50 years on, a wife still waits for her fighter pilot husband". Avijit Ghosh. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 December 2021. Retrieved 8 December 2021.
  3. "Long road to nowhere". The Telegraph, Calcutta. Archived from the original on 20 June 2004. Retrieved 2008-06-12.
  4. "On the border of hope". The Deccan Herald. Archived from the original on 9 April 2008. Retrieved 2008-06-12.
  5. "War of Memory". The Tribune Chandigarh. Retrieved 2008-06-12.
  6. "India's families still hoping for answers". BBC. 2008-03-08. Retrieved 2008-06-12.
  7. "Flight Lieutenant Vijay Vasant Tambay". YouTube. 20 December 2011. Archived from the original on 2021-12-21.
  8. "1971 INDO-PAK WAR, POW". Earth Witness. 28 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமயந்தி_தாம்பே&oldid=4387580" இலிருந்து மீள்விக்கப்பட்டது