தபோரிஜோ
தபோரிஜோ
தபோ | |
---|---|
நகரம் & மாவட்டத் தலைமையிடம் | |
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் தபோரிஜோ நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°59′10″N 94°13′15″E / 27.98611°N 94.22083°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | மேல் சுபன்சிரி மாவட்டம் |
நிறுவிய ஆண்டு | 19 சூன் 1991 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | தபோரிஜோ நகராட்சி மன்றம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,468 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 791122 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AR |
வாகனப் பதிவு | AR |
இணையதளம் | https://uppersubansiri.nic.in/ |
தபோரிஜோ (Daporijo), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மேல் சுபன்சிரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரத்தில் சுபன்சிரி ஆறு பாய்கிறது. இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடக்கே 264 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
போக்குவரத்து
[தொகு]தபோரிஜோ நகரத்தில் தபோரிஜோ வானூர்தி நிலையம் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2,638 குடும்பங்கள் கொண்ட தபோரிஜோ நகரத்தின் மக்கள் தொகை 13,405 ஆகும். அதில் 6,918 ஆண்கள் மற்றும் 6,487 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.47% வீதம் உள்ளனர். 1000 ஆண்களுக்கு 938 பெண்கள் என பாலின விகிதம் உள்ளது. சராசரி எழுத்தறிவு 79.47% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 77.31% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 28.52%, இசுலாமியர் 2.01%, கிறித்தவர்கள் 12.31%, தொல்குடி சமயத்தினர் 55.60% மற்றும் பிற சமயத்தினர் 1.57% வீதம் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Daporijo Notified Town City Population Census 2011-2025 | Arunachal Pradesh". www.census2011.co.in. Retrieved 2025-04-10.