தபோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபோன்

தபோன் (Taphon) என்பது தாய்லாந்தின் பாரம்பரிய இசைக்கருவியாகும். இது இரண்டு தலைகளுடன் பீப்பாய் வடிவத்தில் உள்ளது. மேலும் இது மிகவும் பிரபலமான காங்காஸைப் போலவே இரு கைகளின் கைகளாலும் விரல்களாலும் இசைக்ப்படுகிறது.

முதலில் சபோன் என்று அழைக்கப்பட்ட இது, பிப்பாட் எனப்படும் தாய்லாந்தின் பாரம்பரிய தாள இசைக் குழுவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது தாய் நாட்டுப்புற இசையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முரசாகும். மேலும் இது பெரும்பாலும் பாங்காக் மற்றும் சியாங் மாயில் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் தாய் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன், அங்கிருக்கும் கடவுளை மகிழ்விப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது தாய் கலாச்சாரத்தில் குறிப்பாக புனிதமான கருவியாகக் கருதப்படுகிறது. மேலும் பொதுவாக மற்ற கருவிகளை விட உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், வடிவமைப்புகள் தபோனின் நடுத்தர பிரிவில் நெய்யப்படுகின்றன. [1] [2] தபோன் கம்போடிய சாம்போவுடன் மிகவும் ஒத்திருக்கிறது[3]

சான்றுகள்[தொகு]

  1. "Taphon". Thai Music.net. பார்க்கப்பட்ட நாள் 19 April 2021.
  2. "Rhythm Museum". Rhythmuseum.com. Archived from the original on 9 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 19 April 2021.
  3. "Glong and taphon music show at Thailand Pavilion in Expo Milano 2015 (03.08.2015)". YouTube. Archived from the original on 2021-12-22. பார்க்கப்பட்ட நாள் 19 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபோன்&oldid=3676645" இலிருந்து மீள்விக்கப்பட்டது