தபூக்கு மாகாணம்
தபுக்
مِنْطَقَة تَبُوْك (in அரபு மொழி) | |
---|---|
பிராந்தியம் | |
சவுதி அரேபியாவில் தபூக்கின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°0′N 37°0′E / 28.000°N 37.000°E | |
நாடு | சவூதி அரேபியா |
தலைநகரம் | தபுக் |
மாநகராட்சிகள் | 6 |
அரசு | |
• ஆளுநர் | பஹத் பின் சுல்தான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,46,072 km2 (56,399 sq mi) |
மக்கள்தொகை (2017 census) | |
• மொத்தம் | 9,10,030 |
• அடர்த்தி | 6.2/km2 (16/sq mi) |
ISO 3166-2 | 07 |
தபுக் (Tabuk Province, அரபு மொழி: مِنْطَقَة تَبُوْك Minṭaqat Tabūk ) என்பது சவூதி அரேபியாவின் ஒரு பிராந்தியம் ஆகும். இது நாட்டின் வடமேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இப்பிராந்தித்துக்கும் எகிப்துக்கும் குறுக்கே செங்கடல் உள்ளது. இந்த மாகாணத்தின் பரப்பளவு 146,072 கி.மீ² ஆகும். மேலும் இதன் மக்கள் தொகை 910,030 (2017) என்று உள்ளது. [1] இதன் தலைநகரம் தபுக் நகரமாகும். மாகாணத்தின் ஆளுநராக 1987 முதல் ஃபஹத் பின் சுல்தான் உள்ளார். [2]
வரலாறு
[தொகு]தபுக் பிராந்தியத்தின் வரலாறு 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது. இப்பகுதி மிடியன் புவியியல் பகுதியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. 1916/18 அரபுக் கிளர்ச்சியின் போது தாக்குதல்களுக்கு மையமாக இருந்த ஹெஜாஸ் ரயில்வே இந்த பிராந்தியத்தில் பயணிக்கிறது. [3]
மக்கள் தொகை
[தொகு]ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
---|---|---|
1992 | 4,86,134 | — |
2004 | 6,91,716 | +2.98% |
2010 | 7,96,425 | +2.38% |
2018 | 9,30,507 | +1.96% |
source:[4] |
முக்கிய நகரங்கள்
[தொகு]- தபுக்
- டெய்மா
- துபா
- அல் வாஜ்
- ஹக்ல்
- உம்லுஜ்
- அல்-பேட் '
- நியோம் (திட்டமிடப்பட்டுள்ளது)
- அமலா (திட்டமிடப்பட்டுள்ளது)
பொருளாதாரம்
[தொகு]தபுக் பகுதி (அஸ்ட்ரா) ஐரோப்பாவிற்கு பூக்களை ஏற்றுமதி செய்கிறது. [5]
ஆளுநர்களின் பட்டியல்
[தொகு]1926 முதல் இப்பகுதியின் ஆளுநர்கள் பின்வருமாறு: [6]
- முஹம்மது இப்னு அப்துல்ஸிஸ் அல்ஷால் 1926 முதல் 1930 வரை
- 1930 முதல் 1931 வரை அப்துல்லா பின் சாத்
- 1931 முதல் 1935 வரை அப்துல்லா பின் சாத் பின் அப்துல் மொஹ்சென் அல் சுதைரி
- சவுத் பின் ஹிஸ்லோல் பின் நாசர் அல் சவுத் 1936 முதல் 1937 வரை
- 1938 முதல் 1950 வரை முசேத் சவுத் பின் அப்துல்லா பின் அப்துல்ஸீஸ் அல் சவுத்
- சுலைமான் பின் முகமது பின் சுல்தான் அல் சுல்தான் 1950 முதல் 1950 வரை
- அப்துல் ரஹ்மான் பின் முகமது 1950 முதல் 1951 வரை
- காலித் பின் அகமது பின் முகமது அல் சுதைரி 1951 முதல் 1955 வரை
- முசாத் பின் அகமது பின் முகமது அல் சுதைரி 1955 முதல் 1972 வரை
- 1972 முதல் 1980 வரை சுலைமான் பின் துர்கி பின் சுலைமான் அல் சுதைரி
- 1980 முதல் 1986 வரை அப்துல் மஜீத் பின் அப்துல்ஸீஸ் அல் சவுத்
- மம்தூ பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் 1986 முதல் 1987 வரை
- ஃபஹத் பின் சுல்தான் அல் சவுத், 1987 - தற்போது வரை
குறிப்புகள்
[தொகு]- ↑ "Population Characteristics surveys" (PDF). General Authority for Statistics. 2017.
- ↑ The house of Saud in commerce : a study of royal entrepreneurship in Saudi Arabia. 2001.
- ↑ "Tabūk | Saudi Arabia". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-11.
- ↑ Saudi Arabia: Regions and Cities
- ↑ "Tabouk City Profile, Saudi Arabia". The Saudi Network (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 May 2017.
- ↑ "the list of all governors of Tabuk Province". Ministry of Interior. Archived from the original on 22 January 2011. பார்க்கப்பட்ட நாள் 8 May 2012.