உள்ளடக்கத்துக்குச் செல்

தபனான் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபனான் பிராந்தியம்
Tabanan Regency
Kabupaten Tabanan
ᬓᬩᬸᬧᬢᬾᬦ᭄ᬢᬩᬦᬦ᭄
தபனான் நெல்வயல்கள்
தானா லாட்
பிரத்தான் ஏரி
ரெஜாங் நடனம்
அரண்மனையின் அடித்தளம்
புங் கர்னோ பூங்கா
அலுவல் சின்னம் தபனான் பிராந்தியம்
சின்னம்
பாலியில் தபனான் பிராந்தியம்
பாலியில் தபனான் பிராந்தியம்
தபனான் பிராந்தியம் is located in இந்தோனேசியா
தபனான் பிராந்தியம்
ஆள்கூறுகள்: 8°33′4.13″S 115°7′17.81″E / 8.5511472°S 115.1216139°E / -8.5511472; 115.1216139
நாடு இந்தோனேசியா
மாநிலம் பாலி
தலைநகரம்தபனான்
பரப்பளவு
 • மொத்தம்839.33 km2 (324.07 sq mi)
மக்கள்தொகை
 (2024)[1]
 • மொத்தம்476.472
 • அடர்த்தி0.57/km2 (1.5/sq mi)
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +8
அஞ்சல் குறியீடு
821xx
தொலைபேசி(+62) 361
வாகனப் பதிவெண்கள்DK
இணையதளம்tabanankab.go.id

தபனான் பிராந்தியம் (ஆங்கிலம்: Tabanan Regency; இந்தோனேசியம்: Kabupaten Tabanan) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும்.[2] இந்தப் பிராந்தியத்திற்கு கிழக்கில் உள்ள பாடுங் பிராந்தியம்; மற்றும் தென்பசார் நகருடன் ஒப்பிடும்போது சற்று வளர்ச்சி அடையாத பிராந்தியமாகக் காணப்படுகிறது.

தபனான் பிராந்தியம் தெற்கே இந்தியப் பெருங்கடலுடன் கடல் எல்லையைக் கொண்டுள்ளது; வடக்கே பிரத்தான் ஏரியால் சூழப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் மிக உயரமான சிகரம் படுகாரு மலையில் (Gunung Batukaru) உள்ளது. தபனான் பிராந்தியத்தின் பரப்பளவு 1,013.88 கிமீ² ஆகும். இது தபனான் பிராந்தியத்தை பாலியில் 3-ஆவது பெரிய பிராந்தியமாகப் பதிவு செய்கிறது.

தபனான் பிராந்தியம் 839.33 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது; மற்றும் 2000-ஆம் ஆண்டில் 386,850 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. 2010-இல் 420,913 ஆக உயர்ந்தது. பின்னர் 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 461,630 ஆக உயர்ந்து காணப்பட்டது; 2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 469,340 ஆக இருந்தது.[3]

இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் தபனான் நகரம் ஆகும். தபனான் நகரில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் கடலோரப் பாறைத் தீவான தானா லாட் (Tanah Lot) முதன்மைத் தலமாக விளங்குகிறது.[4]

சுற்றுலா மேம்பாட்டு கட்டுப்பாடு

[தொகு]

பாலி தீவின் மிகப்பெரிய பரப்பளவிலான 53,000 எக்டேர் வேளாண் நிலங்களைப் பாதுகாக்க தீவிர முயற்சிகள் எடுத்து வரப்படுகின்றன. அந்த வகையில், தபனான் பிராந்திய நிர்வாகம் இனிவரும் காலங்களில் நட்சத்திர நகர தங்கும் விடுதிகளை உருவாக்க அனுமதிப்பது இல்லை என முடிவு செய்துள்ளது. இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டுடன், சுற்றுலா வசதிகள் அனுமதிக்கப்படுகின்றன.

சுற்றுலா கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட்டால், கட்டிடங்களுக்கு 30% நிலப்பரப்பும், நெல் வயல்கள் அல்லது பிற வேளாண் தோட்டங்களுக்கு 70% நிலப்பரப்பும் ஒதுக்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தபனான் பிராந்திய நிர்வாகம், 300 எக்டேர் நெல் வயல் பாதுகாக்கப்பட்ட மண்டலத்தையும்; பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே 100 எக்டேர் வீட்டுவசதி மண்டலத்தையும் உருவாக்க முடிவு செய்துள்ளது.

பொது

[தொகு]

தபனான் பிராந்தியம் ஒரு வெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் வறண்ட காலம் மற்றும் மழைக்காலம் என இரண்டு தனித்துவமான பருவங்கள் உள்ளன. இடைக்கால பருவங்களும் உள்ளன. காற்றின் வெப்பநிலை மாறுபடும். சராசரியாக வெப்பநிலை 27.60 C ஆகும்.

நீர்ப்பாசன அமைப்புகள் கடற்கரையின் வடிவம் மற்றும் மழைப்பொழிவால் பாதுகாக்கப்படுகின்றன. இது நீர் சேமிப்பு மற்றும் நீர்ப்பாசனத்திற்கான ஆதாரமாகவும் விளங்குகிறது.[5]

நிர்வாக மாவட்டங்கள்

[தொகு]

தபனான் பிராந்தியம் பத்து மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக
குறியீடு
மாவட்டம்
(Kecamatan)
பரப்பு
கிமீ 2
மக்கள்
தொகை
2010
மக்கள்
தொகை
2020
மக்கள்
தொகை
2022
நிர்வாக
மையம்
கிராமம் அஞ்சல்
குறியீடு
51.02.01 செலாமாதெக் 52.05 19,262 21,874 22,400 பாஜெரா 10 82164
51.02.02 கிழக்கு செலாமாதெக்
(East Selemadeg)
54.78 21,154 23,826 24,300 மெகாத்தி 10 82160
51.02.03 மேற்கு செலாமாதெக்
(West Selemadeg)
120.15 18,809 21,079 21,500 அந்தோசாரி 11 82162
51.02.04 கெராம்பித்தான் 42.39 37,704 41,766 42,500 கெராம்பித்தான் 15 82161
51.02.05 தபனான் (மாவட்டம்) 51.40 70,526 76,235 77,300 தபனான் (நகரம்) 12 82111
- 82115
51.02.06 கேடிரி 53.60 84,215 90,491 91,600 கேடிரி 15 82121
- 82123
51.02.07 மார்கா 44.79 40,353 42,898 43,400 மார்கா 16 82181
51.02.09 பத்துரித்தி 99.17 46,425 51,381 52,300 பத்துரித்தி 12 82191
51.02.08 பெனாபெல் 141.98 44,104 49,637 50,700 பெனாபெல் 18 82152
51.02.10 புப்புவான் 179.02 38,361 42,443 43,200 புப்புவான் 14 82163
மொத்தம் 839.33 420,913 461,630 469,340 133

காலநிலை

[தொகு]

தபனான் பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிதமான மழைப்பொழிவும், அக்டோபர் முதல் மார்ச் வரை அதிக மழைப்பொழிவும் இருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், தபனான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.4
(86.7)
30.5
(86.9)
30.6
(87.1)
31.1
(88)
30.8
(87.4)
30.1
(86.2)
29.4
(84.9)
29.5
(85.1)
30.3
(86.5)
31.1
(88)
31.2
(88.2)
30.8
(87.4)
30.48
(86.87)
தினசரி சராசரி °C (°F) 26.3
(79.3)
26.3
(79.3)
26.2
(79.2)
26.3
(79.3)
26.0
(78.8)
25.3
(77.5)
24.9
(76.8)
24.9
(76.8)
25.6
(78.1)
26.3
(79.3)
26.5
(79.7)
26.4
(79.5)
25.92
(78.65)
தாழ் சராசரி °C (°F) 22.2
(72)
22.2
(72)
21.9
(71.4)
21.6
(70.9)
21.2
(70.2)
20.5
(68.9)
20.4
(68.7)
20.4
(68.7)
20.9
(69.6)
21.5
(70.7)
21.9
(71.4)
22.1
(71.8)
21.4
(70.52)
மழைப்பொழிவுmm (inches) 314
(12.36)
260
(10.24)
221
(8.7)
102
(4.02)
111
(4.37)
110
(4.33)
135
(5.31)
69
(2.72)
108
(4.25)
213
(8.39)
237
(9.33)
298
(11.73)
2,178
(85.75)
ஆதாரம்: Climate-Data.org[6]

காட்சியகம்

[தொகு]
  • தபனான் பிராந்திய காட்சிப் படங்கள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Badan Pusat Statistik, Jakarta, 2023, Kabupaten Klungkung Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.5105)
  2. West, Nicole Leigh (21 December 2018). "Bali's Tabanan Regency: Where Tradition and Luxury Meet". Travelogues from Remote Lands. Retrieved 3 March 2025.
  3. Badan Pusat Statistik, Jakarta, 2023, Kabupaten Tabanan Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.5102)
  4. "Tabanan Regency, Bali, Indonesia: Traditional and Historical Architecture". Asian Architecture (in ஆங்கிலம்). Retrieved 3 March 2025.
  5. "TABANAN PLACE OF INTEREST | INTERESTING SITE IN TABANAN REGENCY". www.baligoldentour.com. Retrieved 3 March 2025.
  6. "Climate: Tabanan". Climate-Data.org. Retrieved 17 November 2020.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபனான்_பிராந்தியம்&oldid=4219902" இலிருந்து மீள்விக்கப்பட்டது