தன் மையச் சிந்தனைப் போக்கு
தன் மையச் சிந்தனைப் போக்கு (Egocentrism) தன்னையும் பிறரையும் பிரித்துப் பார்க்க இயலாத தன்மையாகும். மேலும் குறிப்பாக, புறவய உண்மையிலிருந்து, அகவய கருத்தேற்றத்தை சிக்கலின்றி அணுக இயலாமை; தங்களின் சுயசார்புடைய பார்வையை விட்டு விட்டு, வேறு எந்த முன்னோக்கு அல்லது புரிதலுக்கான முயற்சியே மேற்கொள்ள இயலாத்தனம்.[1][2]
தன்மையச் சிந்தனைப் போக்கும் தற்காதலும் ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றல்ல. தன் மையச் சிந்தைனப்போக்குடைய ஒருவன் தற்காதல் கொண்ட ஒருவனைப் போல் தான் தான் கவனிக்கப்பட வேண்டிய மையப்பொருள் என்று நம்புகிறான். ஆனால், தன் மையச் சிந்தனைப் போக்குடைய ஒரு மனிதனால் தன்னைத் தானே வியப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பெற முடியாது. இவ்வகையான இருவரது தன்னுனர்வுமே மற்றவர்களின் ஒப்புதலால் பெரிதும் தாக்கத்திற்குள்ளானாலும், தன் மையச் சிந்தனைப் போக்குடையவர்களுக்கு இது உண்மையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
தன் மையச் சிந்தனைப் போக்கு நடத்தைகள் வயதுவந்தோரில் குறைவான முக்கியத்துவம் உடையதாக இருந்தாலும், சில வகையான தன் மையச் சிந்தனைப் போக்கின் வகைகள், வயது முதிர்ந்தோரிடமும் நீடித்திருப்பது, தன் மையச் சிந்தனைப் போக்கலிருந்து வெளியேவது வாழ்நாள் முழுமைக்கும் நடக்கும் ஒரு வளர்ச்சி என்பதையும் அது ஒரு போதும் முழுமை பெறாது என்பதையும் குறிக்கிறது.[3] குழந்தைகளைக் காட்டிலும் வயது வந்தோர் குறைவான தன் மையச் சிந்தனைப் போக்கு உடையவர்களாக தெரிவதற்கு காரணம் என்னவெனில், தொடக்கத்தில் தோன்றும் தன் மையச் சிந்தனைப் போக்கை அவர்கள் குழந்தைகளை விட விரைவாகச் சரிசெய்து கொள்வதேயாகும். மாறாக, அவர்கள் தன் மையச் சிந்தனைப் போக்கை தொடக்கத்திலேயே தேர்ந்தெடுக்காமல் இருப்பதால் அல்ல.[4]
ஆகவே, தன் மையச் சிந்தனைப் போக்கு வாழ்நாள் முழுமையும் காணப்படுகிறது: குழவிப்பருவம்[5] முன் குழந்தைப் பருவம்,[6] குமரப்பருவம்,[7] மற்றும் வயது முதிர் பருவம்[8] என அனைத்துப் பருவங்களிலும் தொடர்கிறது. இது மனித அறிவு வளர்ச்சிக்கு ஒரு விதத்தில் உதவி செய்கிறது எனலாம். அதாவது, குழந்தைகளின் மனம் பற்றிய கோட்பாடு வளர்ச்சியடைவதற்கும், மற்றும் சுய அடையாள உருவாக்கத்திற்கும் பயன்படுகிறது.
குழவிப் பருவத்தில்
[தொகு]குழவிப் பருவத்து மற்றும் முன் குழந்தைப் பருவத்து குழந்தைகள், தங்கள் எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் நடத்தைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றன என்பதை வெளிக்காட்டத் தொடங்குவதே தன் மையச் சிந்தனைப் போக்கின் முக்கியமான கருத்தாகும். இதுவே, மனதின் கோட்பாடு எனவும் அழைக்கப்படுகிறது.[9] ஆரம்பத்தில். குழந்தைகள் மற்றவர்களுடன் சமூக தொடர்புகளைத் தொடங்கும் போது, முக்கியமாகக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவர்கள் ஒரு தனிப்பட்ட நபர் என்பதையே புரிந்து கொள்வதில் தவறு செய்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் குழந்தையுடன் நீண்ட காலம் ஒன்றாகவே இருக்கிறார்கள். மேலும், கவனிப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி விடுகிறார்கள். உதாரணமாக, ஒரு பொருளை மீட்டெடுக்க தனது தாய் தனக்காக முயலும் போது, குழந்தை தானும் தாயும் வேறு வேறானவர்கள் என்பதைக் கருத்தில் கொள்வதேயில்லை. தனக்காக, தன்னுடைய தாய் கையை நீட்டிப் பொருளை எடுத்ததை தான் எடுத்ததாகவே தவறுதலாக கற்பித்துக் கொள்கிறது. 15 மாத வயதிலேயே, பிள்ளைகள் தன் மையச் சிந்தனைப் போக்கு மற்றும் மனதின் கோட்பாடு ஆகியவற்றின் கலவையை வெளிப்படுத்துகின்றனர். தாங்கள் நினைப்பது போல தன்னைக் கவனித்துக் கொள்பவரோ, தாயோ நடக்காமல் முரண்பாடாக செயல்படுவதாக உணரத் தொடங்குகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anderman, Eric M.; Anderman, Lynley H. (2009). "Egocentrism". Psychology of Classroom Learning: An Encyclopedia 1: 355–357. http://go.galegroup.com/ps/i.do?id=GALE%7CCX3027800102&v=2.1&u=cuny_hunter&it=r&p=GVRL&sw=w&asid=728b0bdaba5697edd4c746b81143d889.
- ↑ Young 2011, ப. 134.
- ↑ Pronin, Emily; Olivola, Christopher Y. (2006). Encyclopedia of Human Development. Thousand Oaks, CA: SAGE Reference. pp. 441–442. பார்க்கப்பட்ட நாள் 20 Oct 2014.
{{cite book}}
: More than one of|accessdate=
and|access-date=
specified (help); More than one of|first1=
and|first=
specified (help); More than one of|last1=
and|last=
specified (help) - ↑ Epley, Nicholas; Morewedge, Carey K; Keysar, Boaz (2004-11-01). "Perspective taking in children and adults: Equivalent egocentrism but differential correction". Journal of Experimental Social Psychology 40 (6): 760–768. doi:10.1016/j.jesp.2004.02.002. http://www.sciencedirect.com/science/article/pii/S0022103104000241.
- ↑ Onishi, K. H., Baillargeon, R. (2005). "Do 15-month-old infants understand false beliefs?". Science 308 (5719): 255–258. doi:10.1126/science.1107621. பப்மெட்:15821091.
- ↑ Wimmer, H., Perner, J. (1983). "Beliefs about beliefs: Representation and constraining function of wrong beliefs in young children's understanding of deception". Cognition 13 (1): 103–128. doi:10.1016/0010-0277(83)90004-5. பப்மெட்:6681741. http://www.sscnet.ucla.edu/polisci/faculty/chwe/austen/wimmerperner.pdf.
- ↑ Adams, G. R., Jones, R. M. (1982). "Adolescent egocentrism: Exploration into possible contributions of parent-child relations". Journal of Youth and Adolescent 11 (1): 25–31. doi:10.1007/BF01537814. பப்மெட்:24310645.
- ↑ Keysar, B., Barr, D. J., Balin, J. A., Brauner, J. S. (2000). "Taking perspective in conversation: The role of mutual knowledge in comprehension". Psychological Science 11 (1): 32–38. doi:10.1111/1467-9280.00211. பப்மெட்:11228840. https://archive.org/details/sim_psychological-science_2000-01_11_1/page/32.
- ↑ Premack, D., Woodruff, G. (1978). "Does the chimpanzee have a theory of mind?". Behavioral and Brain Sciences 1 (4): 515–526. doi:10.1017/S0140525X00076512. https://archive.org/details/sim_behavioral-and-brain-sciences_1978-12_1_4/page/515.