தன்வீர் ஆசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்வீர் ஆசன் (Tanweer Hasan) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.[1][2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மிர்சாபூர் கேடட் கல்லூரியில் ஆசன் படித்தார் .[3] 1986 ஆம் ஆண்டு டாக்கா பல்கலைக்கழகத்தில் நிதியியல் துறையில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார்.[4] 1989 ஆம் ஆண்டில் பெய்லர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டத்தை படித்து முடித்தார்.[5] ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தனது மேலாண்மை மேம்பாட்டுத் திட்டப் படிப்பை முடித்தார்.[4] 1993 ஆம் ஆண்டு ஊசுட்டன் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை ஆசன் முடித்தார்.[4]

தொழில்[தொகு]

ஆசன் உரூசுவெல்ட் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதித்துறை பேராசிரியராக பணிபுரிந்தார்.[4][6] இங்குள்ள பல்கலைக்கழகத்தின் ராபின் வளாகத்தில் ஆசன் கற்பித்தல் பணியில் இருந்தார்.[7] மேலும் இங்கு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் நிலையில் பணிபுரிந்தார்.[8] நிதி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியில் இருந்தார்.[9]

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியன்று வங்காளதேசத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆசன் நியமிக்கப்பட்டார்.[3] இவருக்கு நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் வழங்கப்பட்டது.[10] அறங்காவலர் குழு மற்றும் புர்பானி குழுமத்தின் தலைவரான அப்துல் அய் சர்க்கர் நிதியுதவியுடன் பல்கலைக்கழகத்தின் புதிய பீடங்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.[11] பல்கலைக்கழகத்தில் கிங் செசாங்கு நிறுவனத்தை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் ஆசன் கையெழுத்திட்டார்.[12][13]

மேற்கோள்கள்[தொகு]

  1. "IUB vice chancellor Tanweer Hasan speaking virtually at a function". today.thefinancialexpress.com.bd. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  2. sun, daily. "Vice-Chancellor of Independent University, Bangladesh (IUB) Tanweer Hasan and Managing Director of LankaBangla Securities Limited (LBSL) Mohammed Nasir Uddin Chowdhury recently shake hands after signing a memorandum of understanding to start the first-ever digital financial trading lab at the university level in the country. | Daily Sun |". daily sun (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  3. 3.0 3.1 "Professor Tanweer Hasan joins IUB as the new vice-chancellor". Dhaka Tribune. 2021-02-22. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  4. 4.0 4.1 4.2 4.3 Desk, City (2021-02-23). "Prof Tanweer Hasan appointed IUB VC". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  5. "Prof Tanweer Hasan joins IUB as new vice-chancellor". bdnews24.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  6. "Roosevelt students from Northwest suburbs selected as prestigious business fellows". Daily Herald (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  7. "Arlington Heights- The St. Viator/Sacred Heart of..." Chicago Tribune. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  8. "Prof Tanweer Hasan joins IUB as VC". today.thefinancialexpress.com.bd. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  9. "Institute for Inclusive Finance and Development (InM)". inm.org.bd. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  10. "Prof Tanweer new IUB VC". New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  11. "IUB faculty members get laptops". The Business Standard (in ஆங்கிலம்). 2022-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  12. "IUB to host Korean King Sejong Instt". New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
  13. Sarker, Mosabber Hossain,Abdur Razzak. "Bangladesh engineers, physicians turn to other professions". Prothomalo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்வீர்_ஆசன்&oldid=3867221" இலிருந்து மீள்விக்கப்பட்டது