தன்வி வியாசு
தன்வி வியாசு | |
|---|---|
| பிறப்பு | 30 செப்டம்பர் 1985 வடோதரா, இந்தியா |
| பணி | நடிகை, வடிவழகர், வடிவமைப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2009–2016 |
தன்வி வியாசு (Tanvi Vyas; பிறப்பு 30 செப்டம்பர் 1985) என்பவர் ஓர் இந்திய நடிகையும் அழகுப் போட்டியாளரும் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு "எப்படி மனசுக்குள் வந்தாய் " என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதற்கு முன்பு, இவர் ஒரு வரைகலை வடிவமைப்பாளராக இருந்தார். பின்னர் மும்பையில் பெமினா இந்தியா புவி அழகி 2008-ஆக முடிசூட்டப்பட்டார்.[1]
வாழ்க்கை வரலாறு
[தொகு]குசராத்தின் கலாச்சாரத் தலைநகரான வதோதராவில் பிறந்த இவர், இந்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மருத்துவர் ஜே. கே. வியாசு மற்றும் விஜயா வியாசு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் மருத்துவர் குடும்பத்தின் ஒரே மகள். இவர் தனது பள்ளிப் படிப்பை வதோதராவில் உள்ள இயேசு, மேரி கன்னிமார் மடத்தில் பயின்றார். பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் (குசராத்தி: મહારાજા સયાજીરાવ વિશ્વવિદ્યાલય;) 2009-இல். படிக்கும் போது, கல்லூரி சார்ந்த போட்டியான வெசுடுசைடு பாணி நிகழ்வில் வென்றார். இந்தியத் தொழில்நுட்பக் கழக பவாய் கலாச்சார விழாவான மூட் இண்டிகோ மனநிலையிலும் பங்கேற்றார்.
சிறிய நகரப் பெண்ணாக இருந்ததால், எந்தவிதமான முறையான பயிற்சியின் பின்னணியும் இல்லாமல், நாட்டின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த அழகுப் போட்டியான பெமினா இந்தியா அழகியில் போட்டியிட்டு, 2008-ஆம் ஆண்டு பெமினா இந்திய புவிப் அழகிப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் இவர் பிலிப்பீன்சின் மணிலாவில் நடைபெற்ற புவி அழகி 2008 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]
வடிவழகி தொழில்
[தொகு]2008ஆம் ஆண்டு இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற பிறகு, இவர் வடிவமைப்பாளர்களான ரிது குமார் (துபாய் அழகுநயப்பு வாரம், உடையலங்கார வாரம்), நீதா லுல்லா (கீதாஞ்சலி வாழ்முறை மணமகள் அழகுநயப்பு) திக்விஜய் சிங் லக்மே இந்தியா அழகுநயப்பு வாரம், கிருஷ்ணா மேத்தா (கீதாஞ்சலி அழகுநயப்பு), லகோன் ஹேமந்த் (கொழும்பு) ஆகியோருடன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். தன்வி ஏர் விக், ஜேபி பைஞ்சுதை, கோல்கேட், பஞ்சாரா பேர்னஸ், கிளியர்ட்ரிப்.காம், சிறீ லட்சுமி நகைகள், கென்ட் தண்ணீர் சுத்திகரிப்பான்கள், கேன்வெரா புகைப்பட தொகுப்புகளுக்காகச் சில விளம்பரங்களைச் செய்தார்.
தன்வி சபி, ஏர் இந்தியா, ஹீரோ மிதிவண்டி, பாண்டலூன்சு, விவேக் ஓபராய் உடன் டோனியர், ஆர்எம்கேவி பட்டுப் புடவைகள் ஆகியவற்றின் அச்சு ஊடக விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.
திரைப்பட வாழ்க்கை
[தொகு]தன்வி, பி. வி. பிரசாத் இயக்கிய தமிழ்த் திரைப்படமான "எப்படி மனசுக்குள் வந்தாய் " மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.[3][4]
பின்னர் இவருக்கு நேனேம்...சின்ன பிள்ளைனா?[5] எனும் பத்ம பூசண் டி. ராமாநாயுடுவின் தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.[6]
திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2012 | எப்படி மனசுக்குள் வந்தாய் | மித்ரா | தமிழ் | |
| 2013 | நேனெம் சின்ன பில்லானா[5] | சுவப்னா | தெலுங்கு | |
| 2016 | ஏ இசுகேண்டல் | அன்சு | இந்தி | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vadodara’s Tanvi Vyas is Femina Miss India Earth" Desh Gujarat. 2008-04-11. Retrieved 2010-12-12.
- ↑ Prabhakar, Jyothi (2008-12-04). "Earthy beauty". The Times of India. Retrieved 2010-12-12.
- ↑ "Tanvi Vyas is Focussed on Bollywood". Internet Movie Database. 2010-02-03. Retrieved 2010-12-12.
- ↑ http://popcorn.oneindia.in/artist-filmography/16652/2/tanvi-vyas.html[தொடர்பிழந்த இணைப்பு]. Oneindia. Retrieved 2010-12-12.
- 1 2 "P Sunil Kumar Reddy changes his film's title". 123telugu.com. 14 April 2013. Retrieved 14 April 2013.
- ↑ Chowdhary, Y. Sunita (8 August 2013). "Lucky TANVI". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/lucky-tanvi/article5000588.ece. பார்த்த நாள்: 2013-08-08.
வெளி இணைப்புகள்
[தொகு]- முகநூலில் தன்வி வியாசு
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் தன்வி வியாசு
- Miss India - Official website பரணிடப்பட்டது 15 மே 2013 at the வந்தவழி இயந்திரம்
- Miss India - Profile பரணிடப்பட்டது 30 மார்ச் 2012 at the வந்தவழி இயந்திரம்
- Tanvi Vyas at BollyGallery