தன்வினை / பிறவினை வாக்கியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தன்வினை வாக்கியம்[தொகு]

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.

உதாரணம்[தொகு]

பாரி உண்டான்.

இவ்வகை வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

பிறவினை வாக்கியம்[தொகு]

ஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது.

உதாரணம்[தொகு]

பாரி உண்பித்தான். இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

 • இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.
 தன்வினை  -  பிறவினை
 வருந்துவான் -  வருத்துவான்
 திருந்தினான் -  திருத்தினான் 
 அடங்கினான் - அடக்கினான்
 • இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.
 தன்வினை - பிறவினை
 ஆடினான் – ஆட்டினான்
 மாறுவான் - மாற்றுவான்
 • பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
  நட - நடப்பி - நடப்பித்தான் 
  செய் - செய்வி - செய்வித்தான்
 • சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

[1]

 1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". பார்த்த நாள் 23 சூன் 2017.