தன்நேர்மின்னணு மாற்றம்
தன்நேர்மின்னணு மாற்றம் (autoprotolysis) என்பது ஒரே மாதிரியான இரண்டு மூலக்கூறுகளுக்குள் ஒரு புரோட்டான் மாற்றப்படும் வினையாகும். வினையில் ஈடுபடும் மூலக்கூறுகளில் ஒன்று பிரான்சிடெட் அமிலமாக செயல்பட்டு ஒரு புரோட்டானை வெளிவிடுகிறது. வெளிவரும் புரோட்டானை மற்றொரு மூலக்கூறு பிரான்சிடெட் காரமாக செயல்பட்டு ஏற்றுக் கொள்கிறது. உதாரணமாக தண்ணீர் தன் அயனியாக்கம் வினையின் போது தன்நேர்மின்னணு மாற்ற வினைக்கு உட்படுகிறது.
- H2O + H2O
OH– + H3O+
அமில ஐதரசன் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் இரண்டையும் பெற்றுள்ள எல்லா கரைப்பான்களும் தன்நேர்மின்னணு மாற்ற வினையில் ஈடுபடும்.
உதாரணமாக தூய்மையான நிலையில் அம்மோனியா தன்நேர்மின்னணு மாற்ற வினையில் ஈடுபடுகிறது.
- 2NH3
NH2- + NH4+
மேற்கோள்கள்[தொகு]
Gold book, 1994, 66, 1087 பரணிடப்பட்டது 2015-04-20 at the வந்தவழி இயந்திரம்