உள்ளடக்கத்துக்குச் செல்

தன்சுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்சுரா நகரம்
Dhansura Town
நகரம்
தன்சுரா நகரம்Dhansura Town is located in குசராத்து
தன்சுரா நகரம்Dhansura Town
தன்சுரா நகரம்
Dhansura Town
குசராத்தில் தன்சுராவின் அமைவிடம்
தன்சுரா நகரம்Dhansura Town is located in இந்தியா
தன்சுரா நகரம்Dhansura Town
தன்சுரா நகரம்
Dhansura Town
தன்சுரா நகரம்
Dhansura Town (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°20′57″N 73°12′43″E / 23.34917°N 73.21194°E / 23.34917; 73.21194
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்ஆரவல்லி மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்தன்சுரா நகராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்12,424
 • அடர்த்தி328/km2 (850/sq mi)
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
383310
தொலைபேசி இணைப்புக் குறியீடு2774
வாகனப் பதிவுஜிஜே - 31
அண்மை நகரம்மொடாசா
பாலின விகிதம்926 ♂/♀
கல்வியறிவு80.98%%
மக்களவை (இந்தியா) தொகுதிஆரவல்லி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிமொடாசா
Civic agencyதன்சுரா கிராம ஊராட்சி
இணையதளம்gujaratindia.com

தன்சுரா (Dhansura) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள ஆரவல்லி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரம் ஆகும். அகமதாபாத்திலிருந்து சுமார் 85 கி.மீ. வடகிழக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. முன்பு இது சபர்கந்தா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[1] தற்போது ஆரவல்லி மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. குசராத்து மாநில் நெடுஞ்சாலை எண் 59 இல் மோடசாவிலிருந்து 16 கி.மீ தொலைவிலுள்ளது. மாநில அரசின் போக்குவரத்து சேவைகள் மூலம் மோடசாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு வணிக வளாகங்கள், இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பருத்தியிலிருந்து விதை நீக்கும் ஐந்து பருத்தியாலைகள், பொருட்களை அழுத்தி வடிவமைக்கும் தொழிற்சாலைகள், கற்களை நொறுக்கி உடைக்கும் இயந்திரத்தின் பாகங்கள் தயாரிக்கும் ஆலைகள், சினிமா துறையில் பயன்படும் நெகிழி பாெருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பல தொழிற்சாைலைகளில் பொருட்களை பிரித்தெடுக்க பயன்படும் நகரும் வடிகட்டிகள் மற்றும் பெரிய சந்தை வளாகங்களும் உள்ளன. அதோடு நகராட்சி வளாகம், கதாயதா பனியாக்கள், கச்சி படேல்கள் மற்றும் சவுதாரி படேல்கள் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருபாலருக்கும் விடுதிகள் தனித்தனியாக உள்ளன.

வரலாறு

[தொகு]

1982 ஆம் ஆண்டில் குசராத் அரசின் தொல்பொருள் துறையைச் சேர்ந்த பி.ஜே. மக்வானா மற்றும் தன்சுராவின் டி.பி.சி.பி.எல். மகளிர் கலை மற்றும் வணிக கல்லூரியைச் சேர்ந்த சுமன்.எச். பாண்டியா ஆகியோர் கிராமத்தின் வடக்கே அமைந்துள்ள கோர்மதி-நி-கான் என்று அழைக்கப்படும் மேட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். அகழ்வாராய்ச்சியின்போது 105 செ.மீ ஆழத்தில் மெசோலிதிக் காலத்தைச் சேர்ந்த இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன அவை வடகிழக்கு தென் மேற்காக உள்ளது. இவற்றில் ஒன்று குழந்தையின் எலும்பு கூடு மற்றொன்று பெரிய மனிதரின் எலும்புக்கூடு ஆகும். மேலும் விலங்குகளின் உடைந்த பற்கள் முதுகு எலும்புகள் மைக்ரோலிதிக் கருவிகள் எ.கா. கத்தி, கருங்கல்லால் செய்யப்பட்ட புள்ளி, செதில் வடிவ சீவுளி, கார்னிலியன் மற்றும் சால்செடோனி(நீலச்சாயல் உடைய வெண்ணிற மணிக்கல் வகை) ஆகியவற்றால் செய்யப்பட்ட, சுத்தம் செய்யப்பயன்படும் கருவி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அதே அகழியில் எலும்புக்கூட்டிற்கு கீழே, எரிந்த நிலையிலான செபு என்ற மாட்டின் இனத்தைச் சேர்ந்த எலும்புகள், சுத்தியல் கற்கள் மற்றும் நுண்கற்ககாலத்துடன் தொடர்புடைய தானியங்கள் மற்றும் பிற பொருட்களை அறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பழங்கால கையால் இயக்கப்படும் கல் கருவி ஆகியவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Rasiklal Chhotalal Parikh; Gautama Vā Paṭela; Bharati Kirtikumar Shelat (2005). Rasika-bhāratī: Prof. R.C. Parikh Commemoration Volume. Gandhinagar: Sanskrit Sahitya Akademi. p. 389.
  2. ↑ Sandhya Bansal. Indian Archaeology 1989 90 A Review.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்சுரா&oldid=4440023" இலிருந்து மீள்விக்கப்பட்டது