தன்சிமா ஆசேம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்சிமா ஆசேம்
Tanzima Hashem
இயற்பெயர்তানজিমা হাশেম
தேசியம்பங்களாதேசி
துறைஇணைய தனியுரிமை
கல்வி கற்ற இடங்கள்வங்காளதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
விருதுகள்எல்செவியர் அறக்கட்டளை விருது (2017)

தன்சிமா ஆசேம் (Tanzima Hashem) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் அறிவியலாளர் ஆவார். வங்காளதேசப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக இவர் பணிபுரிகிறார். 2017 ஆம் ஆண்டு எல்செவியர் அறக்கட்டளை விருதைப் பெற்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த பெண் அறிவியலாளர்களில் தன்சிமா ஆசேமும் ஒருவராவார். இருப்பிட அடிப்படையிலான சேவைகள் அணுகப்படும்போது பயனர் தனியுரிமையைப் பராமரிப்பது தொடர்பான ஆய்வுகளில் இவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. 2014 ஆம் ஆண்டில் கணிப்பொறியில் பெண்கள் என்ற பொருளில் முதல் பட்டறையை வங்காளதேசத்தில் ஏற்பாடு செய்ததற்காகவும் இவர் அறியப்படுகிறார்.[1][2]

தன்சிமா ஆசேம் 2004 ஆம் ஆண்டு வங்காளதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டு முதுநிலை பட்டம் பெற்றார். 2011 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[3] 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மெல்போர்னில் ஒரு கல்வி ஆராய்ச்சி பார்வையாளராக பணிபுரிந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Women engineers to receive awards for innovative research in developing countries". Elsevier. 16 February 2017. பார்க்கப்பட்ட நாள் 11 April 2018.
  2. "Asia's Rising Scientists: Tanzima Hashem". Asian Scientist. 27 October 2017. பார்க்கப்பட்ட நாள் 11 April 2018.
  3. "Dr. Tanzima Hashem (ডঃ তানজিমা হাশেম)". Bangladesh University of Engineering & Technology. பார்க்கப்பட்ட நாள் 11 April 2018.
  4. "Dr Tanzima Hashem". World Science Forum. Archived from the original on 12 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்சிமா_ஆசேம்&oldid=3867220" இலிருந்து மீள்விக்கப்பட்டது