உள்ளடக்கத்துக்குச் செல்

தனூப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கப்பல் (United Kingdom)
பெயர்: தனூப்பு
Danube
உரிமையாளர்: நூர்சு லைன்
வெளியீடு: 1890
விதி: காணாமல் போனது 1892
குறிப்பு: 1,459 டன்கள்

தனூப்பு (Danube) என்பது ஒரு கப்பலின் பெயராகும். நூர்சு லைன் என்ற கப்பல் நிறுவனத்திற்காக 1890 ஆம் ஆண்டு இக்கப்பல் கட்டப்பட்டது. 1,459 டன் எடையுள்ள பாய்மரக் கப்பலான இதற்கு ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான ஆறான தன்யூபு ஆறு ஆற்றின் பெயரிடப்பட்டது.

1891 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று தனூப்பு கப்பல் 591 இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பிச்சி தீவுக்கு ஒரு பயணம் மேற்கொண்டது. மேலும், 1892 ஆம் ஆண்டில் 609 பயணிகளை ஏற்றிக்கொண்டு டிரினிடாட்டுக்கும் ஒரு பயணம் மேற்கொண்டது. 1892 சனவரி மாதம் 1 ஆம் தேதியன்று அங்கு வந்தது. இந்தப் பயணத்தின் போது 29 பேர் இறந்தனர்.[1]

பின்னர் 1892 ஆம் ஆண்டில், குவாதலூப்பிலிருந்து நியூயார்க் நகரத்திற்குச் செல்லும் பயணத்தின் போது தனூப்பு காணாமல் போனது.[2] காணாமல் போன கப்பல் பற்றிய தகவல்கள் ஒரு மர்மமாகவே உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனூப்பு&oldid=4413461" இலிருந்து மீள்விக்கப்பட்டது