தனு, புராணம்
Appearance
தனு | |
---|---|
தகவல் | |
துணைவர்(கள்) | காசிபர் |
தனு, தட்சப் பிரஜாபதியின் 60 மகள்களில் ஒருவர். இவரை மற்றொரு பிரஜாபதியான காசிபர் மணந்து முதலில் விருத்திராசூரனை பெறுகிறாள். இந்திரன் தனது வஜ்ஜிரத்தால் விருத்திராசூரனை கொன்றுவிடுகிறார். இதனால் தேவர்களின் தலைவனான இந்திரனை பழிவாங்க காசிபர் மூலம் தானவர்களை பெற்றெடுக்கிறாள்.[1]
இவளது சகோதரிகளில் பிரபலமானவர்கள் அதிதி, திதி, வினதா, கத்ரு, சுரசை, முனி ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kinsley, David (1987, reprint 2005). Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition, Delhi: Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0394-9, p.16