தனுஷ்கோடி பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம்
தனுஷ்கோடி பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி மற்றும் பெரும் பூநாரைகள் சரணாலயம் ஆகும். இது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் அமைந்துள்ளது. இது இராமேசுவரம் தீவின் கடை கோடியில் சதுப்பு நிலப் பகுதியில் 524 எக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.[1] இக்காப்பகம் தமிழ்நாடு அரசினால் 2025ஆம் ஆண்டு சூன் 5 அன்று (உலக சுற்றுச்சூழல் நாள்) ஏற்படுத்தப்பட்டது.[2] இது மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கபட்டுள்ளது.[3]
இது வலசை போகும் ஈரநிலப் பறவைகளின் வலசைப் பாதையில் அமைந்துள்ளது. இங்கு நிலப்பரப்பைச் சார்ந்த 55 வகை பறவை இனங்களும், வலசை வந்துபோகும் 73 பறவையினங்களும் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆகத்து முதல் மார்ச் வரை 700 பூநாரைகள் வரை வலசை வருகின்றன. பிற அலைந்துதிரியும் பறவைகளும் இங்கு வருகின்றன.