தனுஷ்கோடி கலங்கரை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தனுஷ்கோடி கலங்கரை விளக்கம் (Dhanushkodi Lighthouse) என்பது இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் தனுஷ்கோடி பழைய தொடருந்து நிலையம் அருகில் கம்பிப்பாடு என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு கலங்கரை விளக்கம் ஆகும்.

இந்த கலங்கரை விளக்கத்துக்கான பூமி பூசையானது 2020 பெப்ரவரி 18 அன்று செய்யப்பட்டது. இது ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. இந்த கலங்கரை விளக்கமானது 50 மீட்டர் உயரம் கோண்டதாக எண்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் மேலே சுற்றுலாப்பயணிகள் சென்று ராமேஸ்வரம் தீவின் அழகை காணும் வகையில் பார்வையாளர் மாடமும், அமைக்கப்பட உள்ளது. மேலே செல்ல மின்தூக்கி வசதி அமைக்கப்பட உள்ளது.[1] இதில் 18 கடல் மைல் (33.3 கி.மீ) தொலைவுக்கு ஒளி வீசும் திறன் கொண்ட விளக்கு பொருத்தப்படும். இந்த விளக்குகள் சூரிய மின் ஆற்றல் மூலம் செயல்படும். இதன் விளக்கு இலங்கையின், தலைமன்னார்வரை ஒளி வீசும். மேலும் இந்த கலங்கரை விளக்கத்தில் ரேடார் பொருத்தப்படும். இதன் மூலமாக இந்தக் கடல் பகுதியில் வரும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் கண்காணிக்கப்படும். பாம்பன் தீவு பகுதியில் பாம்பன் கலங்கரை விளக்கம் மற்றும் பிசாசு முனை ஆகியப் பகுதிகளில் ஏற்கெனவே இரு கலங்கரை விளக்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.[2]

மேற்கோள்கள்[தொகு]