தனுச்சா கன்வர்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | தனுச்சா கன்வர் | |||||||||||||
பிறப்பு | 28 சனவரி 1998 சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா | |||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | |||||||||||||
பந்துவீச்சு நடை | இடது கை சுழல்பந்து | |||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 151) | 27 திசம்பர் 2024 எ. மேற்கிந்திய தீவுகள் | |||||||||||||
கடைசி ஒநாப | 15 சனவரி 2025 எ. அயர்லாந்து | |||||||||||||
ஒநாப சட்டை எண் | 32 | |||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 84) | 21 சூலை 2024 எ. ஐக்கிய அரபு அமீரகம் | |||||||||||||
கடைசி இ20ப | 28 சூலை 2024 எ. இலங்கை | |||||||||||||
இ20ப சட்டை எண் | 32 | |||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||
2013–2021 | இமாச்சலப்பிரதேச துடுப்பாட்ட அணி | |||||||||||||
2022–முதல் | இரயில்வே அணி | |||||||||||||
2023–முதல் | குசராது செயண்ட்சு | |||||||||||||
மூலம்: CricketArchive, 21 சூலை 2024 | ||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
தனுச்சா கன்வர் (Tanuja Kanwar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 1998 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தற்போது இரயில்வே மற்றும் குசராத்து செயண்ட்சு அணிகளுக்காக இவர் விளையாடுகிறார்.[1][2] இடது கை பந்து வீச்சாளராக தனுச்சா விளையாடுகிறார். [3] 2024 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக பன்னாட்டு அளவில் அறிமுகமானார்.[4]
உள்நாட்டுப் போட்டிகள்
[தொகு]பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட விளையாட குசராத்து செயண்ட்சு அணிக்காக 50 லட்சம் ரூபாய்க்கு ஏலமெடுக்கப்பட்டு தனுச்சா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[5][6] தனது முதல் பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக 2023 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் தேதியன்று விளையாடினார்.[7][8] 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் எட்டு போட்டிகளில் விளையாடினார். அப்போட்டியில் இவர் 8.85 என்ற பந்துவீச்சு சிக்கன விகிதத்தில் ஐந்து எதிரணி இலக்குகளை வீழ்த்தினார்.[9] 2024 பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் 8 ஆட்டங்களில் இருந்து 10 எதிரணி இலக்குகளை 7.13 என்ற பந்துவீச்சு சிக்கன விகிதத்தில் எடுத்தார்.[6]
பன்னாட்டு போட்டிகள்
[தொகு]2024 ஆம் ஆண்டு சூலை மாதம் 21 ஆம் தேதியன்று நடைபெற்ற பெண்கள் 2024 மகளிர் இருபதுக்கு-20 ஆசிய கோப்பைக்கான போட்டியில் சிரேயங்கா பாட்டிலுக்குப் பதிலாக இந்திய அணியில் தனுச்சா கன்வர் சேர்க்கப்பட்டார்.[10][9] தனுச்சா கன்வர் தனது இருபது20 பன்னாட்டுப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக, 2024 ஆம் ஆண்டு சூலை மாதம் 21 ஆம் தேதியன்று அறிமுகமானார்.[11][12] 2024 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானார்.[13][14][15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Player Profile: Tanuja Kanwar". ESPNcricinfo. Retrieved 21 July 2024.
- ↑ "Who is Tanuja Kanwer | Bio | Stats | Gujarat Giants Player". Female Cricket. 22 February 2024. Retrieved 21 July 2024.
- ↑ "Tanuja Kanwar". WPL. Retrieved 27 December 2024.
- ↑ "Injured Shreyanka Patil out of Women's Asia Cup, India call up Tanuja Kanwar". ESPNcricinfo. Retrieved 21 July 2024.
- ↑ "How uncapped Tanuja Kanwar made a big splash at the WPL". ESPNcricinfo. Retrieved 21 July 2024.
- ↑ 6.0 6.1 "Who's Tanuja Kanwer? All You Need To Know About Indian Spinner Who's Making Her Debut Against UAE". News18. Retrieved 21 July 2024.
- ↑ "WPL 2023: Tanuja Kanwar of Gujarat Giants takes first wicket of Women's Premier League". Sportstar. 4 March 2023. Retrieved 21 July 2024.
- ↑ "1st Match (N), DY Patil, March 04, 2023, Women's Premier League". ESPNcricinfo. Retrieved 21 July 2024.
- ↑ 9.0 9.1 "Who is Tanuja Kanwar? India's debutant in clash vs UAE in Women's Asia Cup 2024". India Today. 21 July 2024. Retrieved 21 July 2024.
- ↑ "Women's T20 Asia Cup 2024: Injured Shreyanka Patil out of India squad, call-up for Tanuja Kanwer". Sportstar. 21 July 2024. Retrieved 21 July 2024.
- ↑ "5th Match, Group A, Dambulla, July 21, 2024, Women's Asia Cup". ESPNcricinfo. Retrieved 21 July 2024.
- ↑ "Shreyanka Patil out of Women's Asia Cup 2024 following hand injury, India call up Tanuja Kanwar". Hindustan Times. Retrieved 21 July 2024.
- ↑ "Tanuja Kanwar makes her ODI debut in the 3rd ODI against West Indies". Female Cricket. Retrieved 27 December 2024.
- ↑ "Tanuja Kanwar debuts as West Indies women bat first in 3rd ODI". Cricket.com. Retrieved 27 December 2024.
- ↑ "Who Is Tanuja Kanwer? Left-Arm Spinner Who Made Her ODI Debut For India In 3rd ODI vs WI". CricketOne. Retrieved 27 December 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- Tanuja Kanwar இல்ESPNcricinfo
- Tanuja Kanwar இல்கிரிக்கெட் காப்பகம் (சந்தா தேவை