தனீல் தூபொவ்
தோற்றம்
| தனீல் தூபொவ் Daniil Dubov | |
|---|---|
2019 இல் தூபொவ் | |
| முழுப் பெயர் | தனீல் திமீத்ரியேவிச் தூபொவ் |
| நாடு | உருசியா (2022) |
| பிறப்பு | 18 ஏப்ரல் 1996 மாஸ்கோ, உருசியா |
| பட்டம் | பேராதன் (2011) |
| பிடே தரவுகோள் | 2720 (திசம்பர் 2021) |
| உச்சத் தரவுகோள் | 2720 (திசம்பர் 2021) |
| தரவரிசை | இல. 24 (திசம்பர் 2021) |
| உச்சத் தரவரிசை | இல. 24 (திசம்பர் 2021) |
தனீல் திமீத்ரியேவிச் தூபொவ் (Daniil Dmitrievich Dubov, உருசிய மொழி: Дании́л Дми́триевич Ду́бов; பிறப்பு: 18 ஏப்ரல் 1996) ஓர் உருசிய சதுரங்கப் பேராதன் ஆவார். இவர் 2011-ஆம் ஆண்டில் தனது 14-ஆவது அகவையில் (14 ஆண்டுகள், 11 மாதங்கள், 14 நாட்களில்) பேராதன் பட்டத்திற்கான இறுதி விதிமுறையை எட்டினார்.[1] செயிண்ட் பீட்டர்சுபுர்கில் நடைபெற்ற 2018 உலக அதிரடி சதுரங்க வாகையை தூபொவ் வென்றார்.
தோகாவில் 2016-இல் இடம்பெற்ற உலக சதுரங்க மின்வல்லாட்ட வாகைப் போட்டியில் 14½/21 (+10-2=9) புள்ளிகள் எடுத்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[2][3][4]
2017-இல் உருசிய சதுரங்க வாகையில், தூபொவ் 3-ஆம், 4-ஆம் இடங்களை விளாதிமிர் பெதோசியேவ் உடன் பகிர்ந்து கொண்டார்.[5]
2018 திரம்பரில், தூபொவ் உலக அதிரடி சதுரங்க வாகைப் போட்டியில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Satrapa, James (7 August 2011). "Daniil Dubov, grandmaster at fourteen". ChessBase. Retrieved 8 August 2011.
- ↑ Fischer, Johannes (30 December 2016). "Sergey Karjakin is World Blitz Champion 2016". Chess News. ChessBase. Retrieved 2017-01-13.
- ↑ "Karjakin wins FIDE World Blitz Championship, double gold for Anna Muzychuk". Chessdom. 31 December 2016. Retrieved 2017-01-13.
- ↑ McGourty, Colin (31 December 2016). "Doha Blitz, Day 2: Karjakin ends 2016 as champ". chess24.com. Retrieved 2017-01-13.
- ↑ "Peter Svidler and Aleksandra Goryachkina are 2017 Russian Champions". Chessdom. 15 December 2017. Retrieved 2017-12-28.
வெளி இணைப்புகள்
[தொகு]- தனீல் தூபொவ் rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- தனீல் தூபொவ் player profile at Chess.com
- தனீல் தூபொவ் player profile and games at Chessgames.com
- Daniil Dubov chess games at 365Chess.com
