தனியா பாட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தனியா பாட்டியா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தனியா பாட்டியா
மட்டையாட்ட நடைவலது-கை
பங்குகுச்சக் காப்பாளர் மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்11 செப்டம்பர் 2018 எ இலங்கை
கடைசி ஒநாப1 பிப்ரவரி 2019 எ நியூ ஸிலாந்து
மூலம்: ESPNCricinfo, 10 பிப்ரவரி 2019

தனியா பாட்டியா (Taniya Bhatia)(28 நவம்பர் 1997) ஓர் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.[1] அவர் பிரதானமாக ஒரு விக்கெட் கீப்பர் ஆவார். அவர் பஞ்சாப் மற்றும் வட மண்டலத்திற்காக விளையாடுகிறார். பயிற்சியாளர் ஆப். பி. சிங்கின் கீழ் தற்போது அவர் பயிற்சி பெற்று வருகிறார்.[2] 2018 ஆம் ஆண்டில் பெண்கள் கிரிக்கெட்டில் ஐந்து சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பாட்டியாவை அறிவித்தது.[3]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சண்டிகரில் சப்னா மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோருக்கு அவர் மகளாக பிறந்தார். அவரது தந்தை மத்திய வங்கியில் பணியாற்றுகிறார் மற்றும் அனைத்து இந்திய பல்கலைக்கழக மட்டத்திலும் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.[4] பாட்டியா உடன் பிறந்தவர்கள், அக்கா சஞ்சனா மற்றும் தம்பி சேஹஜ் ஆவர்.

முன்னதாக, டி.ஏ.வி. மூத்த மேல்நிலை பள்ளியில் பயிலும் பொழுதே, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கின் கீழ் பயிற்சி பெற்றார். தற்போது எம்.சி.எம். டி.ஏ.வி மகளிர் கல்லூரியில் பி.ஏ-II படிக்கிறார்.[5]

குடும்ப பின்னணி[தொகு]

பாட்டியாவின் தந்தையும் மாமாவும் கிரிக்கெட் வீரர் ஆவர். அவரது சகோதரரும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு கிரிக்கெட் அணியில் இணைந்தார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கையில்[தொகு]

தனது டி. ஏ. வி அகாடமி நாட்களுக்குப் பிறகு, 11 வயதிலேயே 19 வயதுக்குட்பட்ட பிரிவில் பஞ்சாப்பிற்காக விளையாடிய முதல் இளம் பெண் ஆனார். பின்னர், தனது 16-வது வயதில் மூத்த மாநில அணியில் சேர்ந்தார் பாட்டியா.[7]

13-வது வயதில், 2011-ல் மாநில-உள்நாட்டு போட்டியில் மூத்த பஞ்சாப் அணிக்காக விளையாடிய முதல் இளம் பெண் ஆனார். 2015 ஆம் ஆண்டில், கௌஹாத்தி மண்டல கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவு வட மண்டல அணிக்கு தலைவராக இருந்தார். அந்த ஆட்டத்தில் அவர் 227 ஓட்டங்களையும், 10 பேரை ஆட்டமிழக்கவும் செய்தார். [5] அவர் 16 வயதை எட்டியபோது இந்திய ஏ அணியில் சேர்ந்தார். இரண்டு வருடங்களாக அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு கிட்டத்தட்ட அவர் கிரிக்கெட்டில் தனது ஆர்வத்தை இழக்கவைத்தது. தனது அம்மாவின் ஊக்கம், தன் கனவை தொடரத் தூண்டியது.[8]

இந்திய அணியில் அறிமுகம்[தொகு]

13 பிப்ரவரி 2018 அன்று, தென்னாப்ரிக்காவிற்கு எதிரான பெண்கள் டி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (WT20I) இந்தியாவிற்காக விளையாடி அறிமுகமானார்.[9] சண்டிகரில் இருந்து தேசிய அணியில் விளையாடிய முதல் பெண் கிரிக்கெட் வீரர் ஆவார்.[10] பாட்டியாவின் ஜெர்சி எண் 28 ஆகும்.[11] அவர் 11 செப்டெம்பர் அன்று, இலங்கைக்கு எதிரான போட்டியில், மகளிர் ஒரு நாள் சர்வதேச அளவில் அறிமுகமானார்.[12]

2018 அக்டோபரில், மேற்கிந்திய தீவுகளில் 2018 ஐசிசி மகளிர் டி20 உலக்கோப்பை போட்டியில் இந்தியாவின் அணியில் விளையாட பாட்டியா இடம் பிடித்தார்.[13][14]

குறிப்புகள்[தொகு]

 1. "Taniya Bhatia". ESPN Cricinfo. 13 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Meet Chandigarh's Taniya Bhatia, new wicket-keeping sensation in India women team". www.hindustantimes.com. 15 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
 3. "2018 lookback – the breakout stars (women)". International Cricket Council. 1 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Virat fan Taniya 1st from city to make it to Indian cricket team - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/virat-fan-taniya-1st-from-city-to-make-it-to-indian-cricket-team/articleshow/62451378.cms. 
 5. 5.0 5.1 . 11 January 2018. 
 6. "Taniya Bhatia - 'Keeping' up with her genes". Cricbuzz.
 7. "Taniya Bhatia - 'Keeping' up with her genes" (in ஆங்கிலம்).
 8. Gadiya, Monish (3 November 2018). "Taniya Bhatia Biography: Cricketer | Age | Wicket Keeper | Family" (in ஆங்கிலம்).
 9. "1st T20I, India Women tour of South Africa at Potchefstroom, Feb 13 2018". ESPN Cricinfo. 13 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Chandigarh cricketer Taniya Bhatia keen to make her mark after India selection". Hindustan Times. https://www.hindustantimes.com/cricket/chandigarh-cricketer-taniya-bhatia-keen-to-make-her-mark-after-india-selection/story-CHJvl7X7LM5JsK3qsARHiL.html. பார்த்த நாள்: 28 April 2018. 
 11. "Meet Chandigarh’s Taniya Bhatia, new wicket-keeping sensation in India women team". Hindustan Times. https://www.hindustantimes.com/cricket/meet-chandigarh-s-taniya-bhatia-new-wicket-keeping-sensation-in-india-women-team/story-1ogt3oWCaVPHv9fFMj00sM.html. பார்த்த நாள்: 28 April 2018. 
 12. "1st ODI, ICC Women's Championship at Galle, Sep 11 2018". ESPN Cricinfo. 11 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
 13. "www.bcci.tv". 2018-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 14. "www.icc-cricket.com".

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியா_பாட்டியா&oldid=3358499" இருந்து மீள்விக்கப்பட்டது