தனியாமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தனியாமங்கலம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
ஊராட்சி தலைவர் திருமதி. சாவித்ரி
மக்களவைத் தொகுதி தனியாமங்கலம்
மக்கள் தொகை 3 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தனியாமங்கலம் (ஆங்கிலம்: Thaniyamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

இது பிரதான கிராமம் மட்டுமின்றி, மேலும், பாரதி நகர், முத்துராமலிங்கம்பட்டி, தேத்தாம்பட்டி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது, மக்களின் பிரதான தொழில் விவசாயமாக இருப்பினும் கடந்த காலங்களில் பெரும்பான்மையான இளைய சமுதாயத்தினர் இங்கிருந்து சென்று மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பணிபுரியத் தொடங்கியுள்ளனர், தமிழக அரசியலில் ஈடு இணையற்ற தலைவர்களுள் ஒருவரான தியாகி.கன.கக்கன் அய்யா அவர்கள் இந்த கிராமத்தில்தான் பள்ளி ஆசிரியராய்ப் பணியாற்றி பின்னாளில் தீவிர அரசியலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,748 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 1,757 ஆண்கள், 1,991 பெண்கள் ஆவார்கள். தனியாமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.81% ஆகும்.தனியாமங்கலம் மக்கள் தொகையில் 15.93% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://census2001.tn.nic.in/pca2001.aspxRural - Madurai District;Melur Taluk;Thanaiyamangalam Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியாமங்கலம்&oldid=1886559" இருந்து மீள்விக்கப்பட்டது