தனியன் (வைணவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனியன் என்பது வைணவ நூல்களில் காணப்படும் குறியீடு. ஆழ்வார் அல்லது வைணவப் பெரியார் ஒருவரின் பாடல்களைக் கூறும் முன்னர் அவரைப் போற்றித் துதிக்கும் பாடல். தனிமனிதனைப் போற்றும் பாடல் ஆனதால் இப்பாடல் தனியன் எனப்பட்டது என்பது ஒரு பொருள். தனித்து நிற்கும் ஓரிரு பாடலாக இருப்பதால் தனியன் எனப்பட்டது என்பது மற்றொரு பொருள். தமிழில் வரும் தனியன்கள் வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைவது வழக்கம்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் பெரியாழ்வாரைப் போற்றும் தனியன்களாக மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றில் முதல் தனியன் வடமொழியில் நாதமுனிகள் செய்தது. [1] அடுத்த இரண்டு தனியன்கள் பாண்டியபட்டர் என்பரால் பாடப்பட்டவை.[2] அதே போல ஆண்டாள் திருப்பாவை தொடங்குவதற்கு முன்னர் பட்டர் அருளிய வடமொழித் தனியன் ஒன்றும், உய்யக்கொண்டார் அருளிய தனியன்கள் இரண்டும் உள்ளன.[3] இப்படிப் பிற ஆழ்வார்களின் பாடல்களுக்கும் தனியன் பாடல்கள் உண்டு.

தனியன் பாடல்கள் 10 ஆம் நூற்றாண்டில் பாடி இணைக்கப்பட்டவை.

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தோடயம் – நாட்டை ராகம் – சம்பை தாளம்
  2. 1
    மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்
    சொன்னார் கழற்கமலம் சூடினோம் – முன்னாள்
    கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
    வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.
    2
    பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தான்என்று
    ஈண்டிய சங்கம் எடுத்தூது – வேண்டிய
    வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
    பாதங்கள் யாமுடைய பத்து.

  3. 1
    அன்ன வயல்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
    பன்னு திருப்பாவை பல்பதிகம் – இன்னிசையால்
    பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
    2
    சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
    பாடி அருளவல்ல பல்வளையாய் – நாடிநீ
    வேங்கவற்(கு) என்னை விதி என்ற இம் மாற்றம்
    நாங்கடவா வண்ணமே நல்கு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியன்_(வைணவம்)&oldid=1731687" இலிருந்து மீள்விக்கப்பட்டது