தனியன் வியாக்கியானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் தொகுக்கப்பட்டுள்ள பிரபந்தங்கள் [1] 24. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் தனியன் பாடல்கள் உள்ளன. இவை அப் பிரபந்தங்களுக்குச் சிறப்புப் பாயிரம் போல அமைந்துள்ளன. வைணவர்கள் இந்த்த் தனியன்களை ஓதிய பின்னரே பாசுரங்களை ஓதுவது வழக்கம். சில பிரபந்தங்களுக்கு வடமொழித் தனியன்களும் உள்ளன. தமிழிலுள்ள தனியன் பாடல்கள் மொத்தம் 34. [2]

இவற்றுள் இரண்டொரு பாடல்கள் நீங்கலாகச் சம்பிரதாயமாக வழங்கும் ஏனைய பாடல்களுக்குப் பிள்ளை லோகஞ்சீயர் விரிவுரை [3] எழுதியிருக்கிறார். இவை பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தோடு சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. மற்றும் பிரபந்தங்களுக்கு முற்சேர்க்கையாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தனி நூலாகப் பதிப்பிக்கப்படவில்லை. தனியன் பாடல்களின் பொருள் இவற்றில் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. சிற்றிலக்கியங்கள்
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  3. வியாக்கியானம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியன்_வியாக்கியானம்&oldid=1426905" இலிருந்து மீள்விக்கப்பட்டது