தனித்த இரட்டை

வேதியியலில், ஒரு தனித்த இரட்டை என்பது ஒரு சகப்பிணைப்பில் மற்றொரு அணுவுடன் பகிரப்படாத ஓர் இணை எலக்ட்ரான்களைக் குறிக்கிறது. இந்த ஓரிணை எலக்ட்ரான்கள் சில நேரங்களில் பகிரப்படாத இணை அல்லது பிணைப்பில் ஈடுபடாத இணை என்றும் அழைக்கப்படுகின்றன. தனிமங்களின் கடைசி எலக்ட்ரான் கூட்டில் தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் காணப்படுகின்றன. லூயிசு கட்டமைப்பைப் பயன்படுத்தி அவற்றை அடையாளம் காணலாம். இரண்டு எலக்ட்ரான்கள் இணைந்திருந்தாலும் அவை வேதிப்பிணைப்பில் பங்குபெறாவிடில் அவை தனித்த எலக்ட்ரான் இரட்டைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, தனிமங்களில் தனித்த இரட்டையாக உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை மற்றும் பிணைப்புகளில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை இவற்றின் கூடுதல் அணுவைச் சுற்றியுள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமம்.
தனித்த எலக்ட்ரான் இரட்டை என்பது மூலக்கூறுகளின் வடிவங்களை விளக்கும் இணைதிறன் கூடு எலக்ட்ரான் இணை விலக்கக் கோட்பாட்டில் (VSEPR Theory) பயன்படுத்தப்படும் ஒரு கருத்தாகும். அவை லூயிசு அமிலங்கள் மற்றும் காரங்களின் வேதியியலிலும் குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும், பிணைப்பு அல்லாத அனைத்து எலக்ட்ரான் இரட்டைகளும் வேதியியலாளர்களால் தனித்த இரட்டைகளாகக் கருதப்படுவதில்லை. பிணைப்பு அல்லாத இரட்டைகள் மூலக்கூறு வடிவியலை பாதிக்காத மற்றும் முப்பரிமாண வேதியியல்ரீதியாக செயலற்றவை என்று கூறப்படும் இடைநிலை உலோகங்கள் எடுத்துக்காட்டுகளாகும். மூலக்கூறு சுற்றுப்பாதை கோட்பாட்டில் (முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்ட நியமன சுற்றுப்பாதைகள் அல்லது ஏதேனும் வடிவத்தில் இடமாற்றம் செய்யப்பட்டவை) ஒரு தனித்த இரட்டை பற்றிய கருத்து குறைவாகவே வேறுபடுகிறது, ஏனெனில் ஒரு லூயிஸ் கட்டமைப்பின் சுற்றுப்பாதை மற்றும் கூறுகளுக்கு இடையிலான தொடர்பு பெரும்பாலும் நேரடியானதாக இல்லை. இருப்பினும், பிணைப்பு அல்லாத சுற்றுப்பாதைகள் (அல்லது பெரும்பாலும் பிணைப்பில் ஈடுபடாப் பண்பினைக் கொண்ட சுற்றுப்பாதைகள்) பெரும்பாலும் தனித்த இரட்டைகளாக அடையாளம் காணப்படுகின்றன.

அமோனியாவில் உள்ள நைட்ரஜன் போன்ற நைட்ரஜன் தொகுதி தனிமங்கள் உள்ள அணுக்களில் ஒரு தனித்த இரட்டை காணப்படுகிறது. நெடுங்குழு 16இல் உள்ள தனிம அணுக்களில் (அதாவது தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் போன்று) இரண்டு தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் காணப்படுகின்றன, ஆலசன்கள் (ஐதரசன் குளோரைடில் உள்ள குளோரினைப் போன்று) காணப்படுவதைப் போன்மூன்று தனித்த எலக்ட்ரான் இரட்டைகளைப் பெற்றிருக்கின்றன.
இணைதிறன் கூடு எலக்ட்ரான் இணை விலக்கக் கோட்பாட்டில், தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் அணுவில் உள்ள எலக்ட்ரான் இரட்டைகள் நான்கு முனைகளில் இரண்டில் தனித்த இரட்டைகளுடன் ஒரு நாற்கரத்தின் முனைகளை உருவாக்குகின்றன. H-O-H பிணைப்புக் கோணம் 104.5 ° ஆகும், இது ஒரு நாற்கர கோணத்திற்கு கணிக்கப்பட்ட 109° ஐ விட குறைவாக உள்ளது, மேலும் இது தனித்த எலக்ட்ரான் இரட்டைகளுக்கு இடையிலான விலக்கும் பண்பின் மூலம் விளக்கப்படலாம்.[1][2][3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Fox, M.A.; Whitesell, J.K. (2004). Organic Chemistry. Jones and Bartlett Publishers. ISBN 978-0-7637-2197-8. Retrieved 5 May 2021.
- ↑ McMurry, J. (2000). Organic Chemistry 5th Ed. Ceneage Learning India Pvt Limited. ISBN 978-81-315-0039-2. Retrieved 5 May 2021.
- ↑ Lee, J.D. (1968). Concise Inorganic Chemistry. Student's paperback edition. Van Nostrand. Retrieved 5 May 2021.