உள்ளடக்கத்துக்குச் செல்

தனலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனலைட்டு
Danalite
பொதுவானாவை
வகைசோடாலைட்டு - பெல்ட்சுபாதாய்டு
வேதி வாய்பாடுFe2+4Be3(SiO4)3S
இனங்காணல்
நிறம்மஞ்சள், இளம் சிவப்பு, செம்பழுப்பு, சிவப்பு மற்றும் நிறமற்ற நிறங்கள்
படிக இயல்புஎண்முகம், பன்னிரு முகப் படிகங்கள். குறிப்பாக பொதியாக அல்லது தனித்தனியாக
படிக அமைப்புசமதிருப்பப் படிகங்கள்
பிளப்பு{111} மற்றும் {111}
முறிவுதுணை சங்குருவப்பிளவு அல்லது சம்மற்றப் பிளவு
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5.5 to 6
மிளிர்வுபளபளப்பு அல்லது பிசுக்குத்தன்மை
கீற்றுவண்ணம்சாம்பல் வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைபகுதியாக ஒளிபுகும்
ஒப்படர்த்தி3.28 - 3.46
ஒளியியல் பண்புகள்சமதிருப்பம்
ஒளிவிலகல் எண்n = 1.747 - 1.771
மேற்கோள்கள்[1][2][3]

தனலைட்டு (Danalite) என்பது Fe2+4Be3(SiO4)3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இரும்பு பெரிலியம் சிலிக்கேட்டு சல்பைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் தனலைட்டு கனிமத்தை Dan[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கிரானைட்டு எனப்படும் கருங்கல் வகையில், வெள்ளீயத்தைக் கொண்டுள்ள தீப்பாறைகளில், பூமிக்கடியில் உருகித் திண்மமான கற்குழம்பில், பல்லுருவப்பாறைச் செதில்களில், உயர்வெப்ப அழுத்த பல்லுருத்தோற்ற பாறைகளில், நீர்வெப்பப் படிவுகளில் என இக்கனிமம் ஓர் அரிய கனிமமாகத் தோன்றுகிறது. தனலைட்டு கனிமம் மேக்னடைட்டு, கார்னெட்டு, புளோரைட்டு, அல்பைட்டு, கேசிட்டரைட்டு, பைரைட்டு, மசுகோவைட்டு, ஆர்சனோபைரைட்டு, குவார்ட்சு, குளோரைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.

அமெரிக்காவின் மாசச்சூசெட்சு மாநிலத்திலுள்ள எசெக்சு மாகாணத்தில் 1866 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. கனிமவியலாளர் யேம்சு திவைட்டு தனா இதைக் கண்டறிந்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. மாசச்சூசெட்சு மாநிலம் தவிர நியூ ஆம்ப்சையர், சியரா மாகாணம், நியு மெக்சிகோம் யாவபாய் மாகாணம், அரிசோனா, ஊசிமுனை மலை, பிரிட்டிசு கொலம்பியா, வால்ரசு தீவு, யேம்சு வளைகுடா, கியூபெக், சுவீடன், இங்கிலாந்து, கோர்ன்வால், இமால்கா, டிரான்சுபைகால், உருசியா, கசக்சிசுத்தான், சோமாலியா, தாசுமேனியா, மேற்கு ஆத்திரேலியா, இரோசிமா, சப்பான் போன்ற இடங்களிலும் தனசைட்டு கிடைக்கிறது. [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://rruff.geo.arizona.edu/doclib/hom/danalite.pdf Handbook of Mineralogy
  2. 2.0 2.1 http://www.mindat.org/min-1341.html Mindat.org
  3. http://webmineral.com/data/Danalite.shtml Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனலைட்டு&oldid=3938300" இலிருந்து மீள்விக்கப்பட்டது