உள்ளடக்கத்துக்குச் செல்

தனலட்சுமி சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனலட்சுமி சேகர் (Dhanalakshmi Sekar) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தடகள விளையாட்டு வீரகனையான இவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 சூலை 2021 முதல் நடைபெற உள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு இரட்டையர் 4x400 மீட்டர் ஓட்டயப்பந்தயத்தில் கலந்து கொள்கிறார்.[1] இதற்காக அவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி பெற்று வருகிறார்.

வரலாறு

[தொகு]

தனலட்சுமி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியை அடுத்த குண்டூரைச் சேர்வந்தவர். இவர் இளம் வயதிலேயே தந்தை சேகரை இழந்து தாய் உஷவாவினால் வளர்க்கபட்டவர். இவர் 2021 மார்ச் மாதம் பஞ்சாப்பின் பட்டியாளாவில் நடந்த தேசிய பெடரேசன் கோப்பை தடகளப் போட்டடியல் கலந்துகொண்டு 100 மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து, இந்தியாவின் முன்னணி வீராங்கனையான டூட்டியின் சாதனையை முறியடித்தார். இதேபோல 200 மீட்டர் போட்டியில் 23.26 வினாடிகளில் கடந்து பி. டி. உசாவின் சாதனையை முறியடித்தார். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வேலை வேண்டும்: டோக்கியோ ஒலிம்பிக்ஸ்ஸிக்கு தேர்வான தனலட்சுமி கோரிக்கை, தினமணி, 2021 சூலை 6
  2. அ. வேலுசாமி/சுப. ஜனநாயகச்செல்வம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி: பதக்கம் வெல்வோம் என்ற உறுதியுடன் தடகளத்தில் தடம் பதிக்கும் தமிழக வீரர், வீராங்கனைகள், இந்து தமிழ் 2021 சூலை, 7
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனலட்சுமி_சேகர்&oldid=3191757" இலிருந்து மீள்விக்கப்பட்டது