தனம் நாகேந்தர்
தனம் நாகேந்தர் | |
---|---|
ஆந்திரப் பிரதேச அரசின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 டிசம்பர் 2018 | |
தொகுதி | கைரதாபாத் |
பதவியில் 2009–2014 | |
தொகுதி | கைரதாபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 ஆகத்து 1958 ஐதராபாத்து , ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | பஞ்சாரா ஹில்ஸ், ஐதராபாத்து |
தனம் நாகேந்தர் (Danam Nagender) (பிறப்பு: ஆகஸ்ட் 9, 1958) இந்திய அரசியல்வாதியும், தெலங்காணாவிலுள்ள கைரதாபாத் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். இவர் ஒன்றிணைந்த ஆந்திர பிரதேசத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்பு, பயிற்சி மற்றும் தொழிற்சாலைகள், தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மற்றும் சுகாதார அமைச்சராகவும் இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] [2] 2009 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். 2014 சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். இவர் 23 ஜூன் 2018 அன்று காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறி, பாரத் இராட்டிர சமிதியில் சேர்ந்தார். 2018 பொதுத் தேர்தலில் கைரதாபாத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
தொழில்
[தொகு]நாகேந்தர் 1994, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஆசிப்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
தொகுதிகள் பிரிக்கப்பட்ட பிறகு, நாகேந்தர் 2009 தேர்தலில் கைரதாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [3] [4]
2009 ஆம் ஆண்டு எ. சா. ராஜசேகரின் முதல் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட நாகேந்தர், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளின் துறைகளை வகித்தார். கொனியேட்டி ரோசையாவின் அமைச்சரவையிலும் அதே துறைகளைத் தொடர்ந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of MLAs" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம். APOnline.
- ↑ "Council of Ministers" பரணிடப்பட்டது 8 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம். APOnline.
- ↑ "Profile of Danam Nagender - Khairtabad". hello ap. 2011-01-05.
- ↑ "Updated official microsite of Danam Nagender - Khairtabad" பரணிடப்பட்டது 19 ஏப்பிரல் 2014 at the வந்தவழி இயந்திரம். danamnagender 2014-04-17.