தனக்குறு விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனக்குறு விளைவு (Somatic effect) மற்றும் கதிர்வீச்சு வெளிப்பாடு (Radiation exposure) போன்றவை கதிர்வீச்சிற்கு ஆளானவர்களிடம் பல துன்பியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. அவை முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, தற்காலிக மலட்டுத்தன்மை, கண்புரை நோய், தோல் சிவத்தல், தோலில் புண், குருதியில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம், தாமத விளைவாக இரத்தப் புற்றுநோய், புற்றுநோய், வாழ்நாள் குறைவு முதலியவையாகும். இம்மாதிரியான விளைவுகள் கதிர்வீச்சிற்கு ஆடபட்டவரிடம் மட்டுமே காணப்படுவதால் இவ்விளைவு தனக்குறுவளைவு எனப்படுகிறது. கதிர்வீச்சுத் துறையில் பணிபுரிகிறவர்கள் இவைகளைத் தெரிந்து இருக்க வேண்டுவது அவசியமாகும்.

ஆதாரம்[தொகு]

அணுவைப் பற்றி ...பம்பாய்த் தமிழ்ச் சங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனக்குறு_விளைவு&oldid=1531461" இலிருந்து மீள்விக்கப்பட்டது