உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தைவழி உறவு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தந்தைவழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆண்-பெண் இருவருக்கிடையிலான திருமண உறவு களும் அதன்பின் அவர்களுக்குள்ளான பாலுறவு களால் உருவாகும் குழந்தை களை ஆண்களின் தந்தை வழியில் கொண்டு வருவதா அல்லது பெண்களின் தாய் வழியில் கொண்டு வருவதா என்பதை அவர்கள் சார்ந்துள்ள சாதிகள் அடிப்படையில் பிரிக்கிறார்கள். குழந்தைகளை ஆண்களின் வழியில் கொண்டு வரும் உறவுமுறைக்குத் தந்தைவழி உறவு முறை என்று பெயர். இந்தத் தந்தைவழி உறவு முறையைக் கொண்டுள்ள சாதிகளில் பிறக்கும் குழந்தைகள் தந்தை-->மகன்-->மகனின் மகன்--> என்று தொடர்கிறது. இவ்வழியில் குழந்தையுடன் பிறந்தவர்கள் (சகோதர/சகோதரிகள்)மற்றும் தந்தையுடன் பிறந்தவர்கள் (அத்தை, சிற்றப்பா/பெரியப்பா)என்று அனைவரும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

தந்தைவழி உறவு முறைச் சமூகங்கள்

[தொகு]

தமிழகத்தில் பெரும்பான்மையான சமூகங்கள் தந்தைவழி உறவு முறைச் சமூகங்களாகவே இருக்கின்றன. கோட்டைப் பிள்ளைமார், செவளைப் பிள்ளைமார், இல்லத்துப்பிள்ளைமார், நாங்குடி வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், அரும்புக் கட்டி வேளாளர், ஆம்பநேரி மறவர்,கொண்டையங் கோட்டை மறவர் ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர் போன்று தாய்வழி உறவு முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு சில சமூகங்களைத் தவிர அனைத்துச் சமூகங்களும் தந்தைவழி உறவு முறைகளையேக் கடைப்பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண உறவுகள்

[தொகு]

தந்தைவழி உறவு முறைச் சமூகங்களில் திருமணம் நிகழ்வுகளுக்காக குறிப்பிட்ட சமூகங்களின் தந்தையும், குழந்தைகளும் ஒரே பிரிவினராக இருப்பதால் அந்தப் பிரிவின் மாற்றுப் பிரிவுகளில் உள்ளவர்களுடன் திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரிவில் தாயுடன் பிறந்தவர்கள் மாற்றுப் பிரிவில் இருப்பதால், இந்தச் சமூகங்களில் பெண்ணிற்குத் தாய்மாமன்களையோ அல்லது தாய்மாமனின் மகன்களையோ மணம் முடிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தைவழி_உறவு_முறை&oldid=3624227" இலிருந்து மீள்விக்கப்பட்டது