தந்தங்கள் அழிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென்யாவில் ஏப்ரல் 2016-ல் யானை தந்தக் குவியல் ஒன்று எரிக்கப்பட்டு அழிக்கப்படும் காட்சி.

தந்தங்கள் அழிப்பு (ஆங்கிலம்: Destruction of ivory) என்பது யானைகளை அவற்றின் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோத யானைத் தந்த வணிகத்தை ஒடுக்கவும் அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்புக் குழுக்களால் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும். 2016-ம் ஆண்டு நிலவரப்படி, உலகெங்கிலும் உள்ள 21 நாடுகளில் நடந்த உயர்நிலை நிகழ்வுகளில் 263 டன் (580,000 பவுண்டு) தந்தங்கள் அழிக்கப்பட்டன. பொதுவாக இவை எரிக்கப்பட்டும் அரைக்கப்பட்டும் அழிக்கப்படுகின்றன. முதன்முதலாக இந்நிகழ்வு கென்யாவில் 1989-ம் ஆண்டு நடந்தேறியது. அதே நாட்டில் 2016-ல் 105 டன்கள் (231,000 பவுண்டு) தந்தங்கள் எரிக்கப்பட்டது இந்நிகழ்வுகளில் மிகப்பெரியதாகும்.

இந்த உத்தியை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள், அரசாங்கங்கள், அரசுசாரா நிறுவனங்கள் உள்ளிட்டவை யானைகளைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்களின் ஆதரவை வேண்டுவதாகவும் இச்செயலின் மூலம் வேட்டையாடுபவர்களுக்கும் சட்டவிரோதமாக தந்தங்களைப் பரிவர்தனை செய்பவர்களுக்கும் எச்சரிக்கை விடப்படுவதாகவும் கூறுகின்றன. அதேசமயம் இச்செயல்கள் தந்தங்களுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி அதன் விளைவாகக் கறுப்புச் சந்தையில் தந்தத்தின் மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்து அதற்காக வேட்டையாடப்படுவதையும் அதிகரிக்கச் செய்ய வல்லவை என்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த நுட்பம் செயல்திறன் மிக்கது என்பதற்கோ வறுமையால் வாடும் நாடுகள் இதன் மூலம் இலாபமடைகின்றன என்ற குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வண்ணமோ போதிய சான்றுகள் கிடையாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

நோக்கம்[தொகு]

யானைகளின் தந்தத்தை வாங்குவது, விற்பது, வியாபாரம் செய்வது ஆகியவற்றைக் குற்றம் என்று முதன்முதலாக நியூயார்க் மாகாணம்தான் 2014-ல் சட்டம் இயற்றியது. உலகெங்கும் யானைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, நியூயார்க் பூங்காவில் இரண்டு டன் யானை தந்தத்தை அரைத்துப் பொடி செய்தனர். அவ்வாறு அரைத்த தந்தங்களில், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பழமையான பொருட்களும் மற்றும் அழகிய சிற்பங்களும் அடங்கும்.[1] யானை தந்த அரைப்பு நிகழ்வு, யானைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brought to tusk! New York's black market in ivory is smashed to smithereens in Central Park as sculptures and carvings worth $4.5 MILLION are fed through a rock crusher

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தங்கள்_அழிப்பு&oldid=3614885" இலிருந்து மீள்விக்கப்பட்டது