தத்வபோதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதாந்த சஸ்திரங்களை முறையாக படிக்க விரும்புபவர்களுக்கு “தத்வபோதம்” என்ற நூல் ஒரு அறிமுக நூலாகும்.[1] வேதாந்த விஷயங்களில் எதை படிக்க விரும்புகின்றோமோ அதன் சாராம்சமாக இந்த நூல் விளங்குகின்றது. ஜீவாத்மா, சிருஷ்டி, ஈஸ்வரன், கர்மபலன், இறுதியில் மோட்சம் வரை அனைத்து விளக்கங்களும் இந்த “தத்வ போதம்” என்ற இந்த நூலின் வாயிலாக அறியலாம்.

உபநிஷத்துக்களை படிக்க விரும்பினால் ஒரு மலர் தோட்டத்தில் விளைந்துள்ள பல்வேறு மலர் செடிகளின் கூட்டம் போன்று ஒவ்வொரு செடியிலிருந்தும், ஒவ்வொரு வண்ண மயமான பலவித மலர்களைப் பறித்து வந்து மாலையாக கட்ட வேண்டும். ஆனால், இந்த “தத்வபோதம்” என்ற நூல் அத்தகைய சிரமத்தை கொடுக்காமல் ஏற்கனவே பல மலர்களின் தொகுப்பை ஒன்றாக கட்டிய மலர் மாலைப் போன்று மிகவும் எளிதாக அனைத்து உப நிஷத்துக்களின் சாராம்சங்களை தொகுத்து பயன் படுத்திக் கொள்ளும்படி அமைந்துள்ளது.

மேலும் வேதாந்த பாடங்களைப் படிக்க விரும்பும் அதிகாரி, வேதாந்தத்திற்கே உரித்தான சில புதிய வார்த்தைகளை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் உண்டாகின்றது. உதாரணமாக, மித்யா, சத்தியம், கர்மம், அதிகாரித்துவம், சமஹ, தமஹ மற்றும் சிரத்தை போன்ற வார்த்தைகளை எளிய தமிழ் நடையில் அனைவரும் படித்து புரிந்து பயனடையும் வகையில் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலினை ஆழ்ந்து படிக்கின்றவர்கள் நிச்சயமாக தங்களுடைய பண்பு நலன்களையும், குண நலன்களையும் மேம்படுத்திக் கொண்டு வாழ்வின் எதார்த்த உண்மையை அறிந்து, தெளிந்து ஆனந்தமாக வாழ்வார்கள் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

மேலும், வேதாந்தம் என்ற வேதத்தின் இறுதிப்பகுதிகளான அனைத்து விஷயங்களையும் அனைவரும் விசாரித்து அறியும் வகையில் ஆதி சங்கராச்சாரியார் அவர்கள் பல நூல்களை சமஸ்கிருத மொழியில் இயற்றி சத் விசாரத்தில் ஒவ்வொருவரும் ஈடுபட்டு வாழும் காலத்திலேயே ஜீவன் முக்தனாக வாழ வேண்டும் என்று விரும்பி எழுதிய நூல்களின் வரிசையில் இந்த “தத்வபோதம்” என்ற நூலும் ஒன்றாகும்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்வபோதம்&oldid=3523770" இலிருந்து மீள்விக்கப்பட்டது