தத்துவப்பிரகாசர் (சிவபுரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவபுரம் தத்துவப்பிரகாசர் [1] 15 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த சைவப் பெருமகனார். தத்துவப்பிரகாசர் என்னும் பெயர் கொண்ட நால்வரில் இரண்டாமவர். முதலாம் தத்துவப்பிரகாசரோடு ஒருசாலை மாணவராய்ச் சீர்காழியில் சிற்றம்பல நாடிகளிடம் பாடம் கேட்டவர் சம்பந்த முனிவர். இந்த முனிவரிடம் உபதேசம் பெற்றவர் இந்தச் சிவபுரம் தத்துவப்பிரகாசர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 154.