உள்ளடக்கத்துக்குச் செல்

தத்தா தமானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தத்தா தமானே அல்லது தத்தாத்ரேயா பாலகிருட்டிண தமானே (Datta Tamhane or Dattatreya Balakrishna) Tamhane(1912-2014), மகாராட்டிர மாநிலத்தின் இரத்தினகிரி என்ற நகரத்திலிருந்து வந்த ஒரு காந்தியச் சுதந்திர போராட்ட வீரராவார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

1913 ஏப்ரல் 13இல் இரத்னகிரியில் ஒரு மராத்தி சந்திரசேனியா காயஸ்த பிரபு சமூகத்தில் பிறந்தார். மும்பையின் மத்திய தாதரின் வி.ஜே.டி. தொழிழ்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியலில்|பொறியியல் பிரிவில் இரண்டாமாண்டு கற்றுக்கொண்டிருக்கிற போதே இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1934இல் ஒரு முழு நேர செயல்பாட்டுக்காக தனது படிப்பை கைவிட்டார்.[1]. இவர் இலக்கியத்திற்கான மகாராட்டிர மாநில அரசின் விருதைப் பெற்றுள்ளார்.

அரசியல்

[தொகு]

தானேவில் நடந்த உப்பு சத்தியாகிரகத்திலும் பங்கேற்றுள்ளார். இதனால் சிகாலம் சிறையிலும் இருந்தார். பின்னர், சைமன் குழுவிற்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றார். ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இவர் ஆதிவாசி சமூகத்தின் உயர்நிலைக்காக செயல்பட்டுள்ளார். தானே மாவட்டத்தின் ஒரு ஆதிவாசி பிரதேசமான காரகாவ் பகுதியில் கால்நடையாக பயணம் செய்து பிரச்சினைகளை அறிந்தார். அங்குள்ள ஆதிவாசிகளிடையே வாழ்ந்ததன் மூலம் அவர்களின் உரிமைகளுக்காக போராடி அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டார்.[2] இதற்காக இவர் "ஆதிவாசி சேவை விருதைப்" பெற்றார்.[3][4][5][6]

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். 1983இல் தீவிர அரசியலிலிருந்து முற்றிலும் விலகினார். இவருடைய நூறாவது வயதில் அப்போதைய மகாராட்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சௌகான் இவரை கௌரவித்தார்.[1]

இலக்கியம்

[தொகு]

இலக்கியத்தில் ஒரு சிறந்த வாசகராகவும், எழுத்தாளனாகவும், சிந்தனாவாதியுமாக இருந்த இவர் மராத்தி இலக்கியத்திலும், ஆங்கில இலக்கியத்திலும் பண்டிதனாக இருந்தார். 'கதாசங்க்ரக கலிச்ச கவுடா' என்ற இவரது சிறுகதைத் தொகுப்புக்கு இவருக்கு இலக்கியத்திற்கான மகாராட்டிரா மாநில அரசாங்கத்தின் விருது கிடைத்துள்ளது.[1]

இறப்பு

[தொகு]

2014 ஏப்ரல் 6, அன்று தனது 102 வயதில் இறந்தார்.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 http://eprahaar.in/freedom-fighter-datta-tamhane-passes-away/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-10-03. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
  3. Ganesh Prabhakar Pradhan (2005). Pursuit of ideals: autobiography of a democratic socialist. p. 88. அவரது பேச்சு ஒரு மக்கள் பிரதிநிதியாக எனது பொறுப்பை உணர்த்தியதுடன், எனது அரசியல் வாழ்க்கையில் வாய்ப்பு, சவால் இரண்டையும் உணர்த்தியது. எனது மூத்த நண்பர் தத்தா தம்கானே, 1932, 1942இல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1957 முதல் 1962 வரை தானே நகரத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரஜா சோசலிசக் கட்சியின் பயனுள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
  4. "Link - Volume 16, Part 3 - Page 38". United India Periodicals. 1974. தம்கானே சோசலிசக் கட்சியின் தொடக்கத்திலிருந்தே ஒரு தீவிரமான கட்சித் தலைவராக இருந்தா. மேலும், உண்மையான சரியான காந்திய பாணியில் தனது நேர்மை மற்றும் நேர்மைக்கு நன்கு அறியப்பட்டவர். {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  5. "Freedom fighter Datta Tamhane dead". Business Standard, PTI. 2014. http://www.business-standard.com/article/pti-stories/freedom-fighter-datta-tamhane-dead-114040700331_1.html. "மூத்த சுதந்திர போராட்ட வீரர் தத்தா தம்கானே தனது 102 வயதில் இறந்தார்.... சைமன் குழு, உப்பு சத்தியாகிரகத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். இவர் ஆதிவாசி சேவா புரஸ்கார் மற்றும் அவரது கதாசங்க்ரகா கலிச்சா கவுடா புத்தகத்திற்காக மாநில அரசின் இலக்கிய விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றவர்." 
  6. The Illustrated Weekly of India. 91. Bennett, Coleman & Company. July 1970. p. 14. "B.T.RANADIVE (b. 1904), a member of the Politbureau of the CPI.(M).Other notable C.K.Ps in this sphere are Mrinal Gore, V. B. Karnik and Datta Tamhane". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தா_தமானே&oldid=3711484" இலிருந்து மீள்விக்கப்பட்டது