தத்தாத்ரேய யோக சாஸ்திரம்
தத்தாத்ரேயயோகசாஸ்திரம் (சமஸ்கிருதம்: दत्तात्रेयोगशास्त्र) 13 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வைஷ்ணவ உரை ஆகும்.[1][2] இது ஹட யோகத்தின் முறைப்படுத்தப்பட்ட வடிவத்தை வழங்கும் ஆரம்பகால உரையாகும்.[3]
மூன்று பாதைகள்
[தொகு]தத்தாத்ரேயயோகசாஸ்திரமானது யோகாவை மந்திர யோகம், லய யோகம் மற்றும் ஹத யோகம் என மூன்று வகைகளாக விவரிக்கிறது. இம்மூன்றும் இராஜயோகத்தின் இலக்கான சமாதிக்கு இட்டுச் செல்கின்றன. மந்திர யோகம் என்பது சக்திகள் (சித்திகள்) கிடைக்கும் வரை மந்திரங்களை திரும்பத் திரும்பச் சொல்வதைக் குறிக்கிறது. மேலும் லய யோகம் மூலம் குண்டலினியை மேலெழுப்புவதைக் குறிக்கிறது. எனினும் உடலின் சக்கரங்களைப் பற்றி குறிப்பிடவில்லை.[2]
முத்திரைகள்
[தொகு]தத்தாத்ரேயயோகசாஸ்திரம் மகாமுத்ரா, மஹாபந்தா, கேசரிமுத்ரா, ஜாலந்தரபந்த, உண்டியாணிபந்தா, மூலபந்தா, விபரீதகாரணி, வஜ்ரோலி, அமரோலி, மற்றும் அமரோலி போன்றவற்றைக் கற்பிக்கிறது. முக்கிய திரவ பிந்துவின் இயக்கத்தை நிறுத்துவது அல்லது தலைகீழாக வைப்பதே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
எண்மடங்கு யோகம்
[தொகு]இது பதஞ்சலி யோகாவினை ஒத்த எட்டு உறுப்புகளைக் கொண்டுள்ளது. யக்ஞவல்யர் மற்றும் பிறர் பத்து பயிற்சிகள் மூலம் அடைந்ததை பத்து பயிற்சிகள் மூலம் கற்பிக்கிறது. இதில் மொத்தம் 84,00,000 ஆசனங்கள் உள்ளன. மூச்சுப்பயிற்சிக்கான (ப்ராணயாமம்) கணக்குகளை இந்நூல் விளக்குகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mallinson 2011, ப. 771.
- ↑ 2.0 2.1 Mallinson 2016, ப. 109–140.
- ↑ Singleton, Mark; Mallinson, James (February 2016). "Hatha Yoga Project". The Luminescent. Hatha Yoga Project (SOAS, University of London). பார்க்கப்பட்ட நாள் 14 November 2020.