தண்ணீர்ப்பந்தல் (கோயம்புத்தூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தண்ணீர்ப்பந்தல் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இவ்வூர், கோவை மாவட்டத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் இவ்வூர் ஆலாந்துறை முதன்மைச் சாலையில் உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

பண்டு வெள்ளிமலை (வெள்ளியங்கிரி) சமணர் படுகைக்கும் சிவன் கோவிலுக்கும் பயணம் மேற்கொள்வோர்க்கு தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. இக்காரணம் பற்றியே இவ்வூர் இப்பெயர் பெற்றது.

கல்வி, மொழி மற்றும் கலாச்சாரம்[தொகு]

தமிழ் மொழியே பெரும்பாலும் முதன்மை மற்றும் நாளாந்த மொழியாக உள்ளது. இளைய தலைமுறையினர், ஆங்கிலம் அறிந்தவர்களாக உள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு[தொகு]

வேளாண்மை முதன்மை தொழில். மேலும் வேளாண் சார்த்த தொழில்கள், ஆலாந்துறை முதன்மை சாலையில் அமைந்துள்ளதால் தேநீர் விடுதி, அடுமனை முதலானவையும் இங்கு நடைபெறுகின்றன.