தண்ணீர்க் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Gallicrex|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
தண்ணீர்க் கோழி
இந்தியாவின் அரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள பாசாய் சதுப்பு நிலத்தில் ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Gallicrex
இனம்: வார்ப்புரு:Taxonomy/GallicrexG. cinerea
இருசொற் பெயரீடு
Gallicrex cinerea
(Gmelin, JF, 1789)

தண்ணீர்க் கோழி ( Watercock ) என்பது தென்கிழக்காசியா முழுவதும் பரவலாக காணப்படும் காணான்கோழி குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை ஆகும். இது காலிக்ரெக்ஸ் பேரினத்தில் உள்ள ஒரே பறவை ஆகும்.

முதிர்ச்சியடையா ஒரு பறவை

விளக்கம்[தொகு]

வயது வந்த தண்ணீர் சேவல் 43 cm (17 அங்) நீளமும் 476–650 g (1.049–1.433 lb) எடையும் இருக்கும்.[2] இவற்றிற்கு கருஞ்சாம்பல் நிற இறகுகளும், சிவப்பான கால்களும், பசுமை கலந்த மஞ்சள் நிற அலகும் இருக்கும். நெற்றியில் முக்கோண வடிவத்தில் கொம்பு போன்ற மஞ்சள் நிறக் கேடையம் காணப்படும். இளம் சேவல்கள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். அவை முதிர்ச்சியடையும் போது கருமை நிறத்தை அடைகின்றன. இவற்றின் அலகு மஞ்சளாகவும், கால்கள் பச்சை நிறத்திலும் இருக்கும். பெண் பறவைகள் சேவலைவிட சிறியதாக இருக்கும். கோழிகள் 36 cm (14 அங்) நீளமும், 298–434 g (10.5–15.3 oz) எடையும் கொண்டவை.[2] இவற்றின் மேற்புறம் அடர் பழுப்பு நிறத்திலும், கீழே வெளிர் நிறத்திலும் இருக்கும். இவற்றின் இறகுகள் கோடுகள் மற்றும் இருண்ட அடையாளங்களுடன் இருக்கும். அலகு மஞ்சள் நிறத்திலும், கால்கள் பச்சை நிறத்திலும் இருக்கும். குஞ்சுகள் எல்லா கானங்கோழிக் குஞ்சுகளைப் போலவே கருப்பு நிறத்தில் இருக்கும். இந்தக் கோழிகளின் உடல் பக்கவாட்டில் தட்டையாக இருக்கும். இந்த உடல் அமைப்பானது இவை நாணல்கள் அல்லது மரங்கீழ் வளர்வன போன்றவற்றின் வழியாக எளிதாக செல்ல ஏதுவாக உள்ளது. இவை நீண்ட கால்விரல்கள், குறுகிய வால் போன்றவற்றைக் கொண்டவை.

தண்ணீர்க் கோழி மறைந்து வாழக்கூடியது, ஆனால் சில நேரங்களில் திறந்த வெளியில் காணப்படும். இவை அமைதியான பறவைகள் என்றாலும், விடியற்காலையிலும், அந்தி வேளையிலும், ஒலி எழுப்புகின்றன.

பரவலும் வாழ்விடமும்[தொகு]

இவற்றின் இனப்பெருக்க வாழ்விடம் தெற்காசியா முழுவதும் இந்தியா, பாக்கித்தான், இலங்கை முதல் தென் சீனா, கொரியா, யப்பான், பிலிப்பீன்சு, இந்தோனேசியா வரையிலான பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் ஆகும். இந்த பெரிய தண்ணீர்க் கோழிகள் இவற்றின் வாழிட எல்லை முழுவதும் நிரந்தரமாக வாழ்பவையாக உள்ளன.

நடத்தையும் சூழலியலும்[தொகு]

இனப்பெருக்கம்[தொகு]

தண்ணீர்க் கோழிகள் நீர்த் தாவரங்களைக் கொண்டு உலர்ந்த தரையில் கூடு கட்டி, 3-6 முட்டைகளை இடுகின்றன.

உணவு[தொகு]

இந்தப் பறவைகள் சேற்றில் அல்லது ஆழமற்ற நீரில் தங்களுடைய அலகால் துழாவுகின்றன. மேலும் பார்வையில் படும் உணவை உண்கின்றன. இவை முதன்மையாக பூச்சிகள், சிறிய மீன்கள், விதைகள் போன்றவற்றை உண்கின்றன. இவை தரையிலும் உணவு தேடுகின்றன.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Gallicrex cinerea". IUCN Red List of Threatened Species 2016: e.T22692789A93369824. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22692789A93369824.en. https://www.iucnredlist.org/species/22692789/93369824. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. 2.0 2.1 CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணீர்க்_கோழி&oldid=3930632" இலிருந்து மீள்விக்கப்பட்டது