தண்ணடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தண்ணடை என்னும் மருத நிலங்களை போரில் சிறந்த வெற்றிச் செயல்களைச் செய்த வீரர்களுக்கு பழங்காலத்தில் கொடுக்கும் வழக்கமாய் இருந்தது. ஆதாரமாகக் கீழ்வரும் புறநானூறு பாடல்கள் குறிப்பிடப்படுகிறது.

புறநானூறு[தொகு]

"ஓடல் செல்லாப் பீடுநடை யாளர்
நெடுநகர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டு முதல் புரளும்
"தண்ணடை பெறுதல்" - புறம் 287
"தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே" - புறம் 297

இப் புறநானூற்றுப் பாடற்பகுதிகள் மன்னர்கள் வீரர்களுக்குத் தண்ணடை நல்கும் வழக்கம் இருந்ததை உணர்த்தும். தண்ணடை பெறுதல் அக்காலத்தில் சிறந்ததாகக் கருதப்பட்டது.

'பெருநீர் மேலும்' என்னும் புறநானூற்றுப்பாட்டை (புறம் - 297) எடுத்துக்காட்டி நச்சினார்க்கினியர் "சீறூர் புரவலாகக் கொள்ளேன், தண்ணடை கொள்வேன் எனத் தன்னுறு தொழில் கூறினான்" என்று கூறியிருப்பது மறக்குடி மகள் தன் மகனுக்கு வேந்தன் தண்ணடை தருதல் வேண்டும் என்று விரும்பினாள் என்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணடை&oldid=3401325" இருந்து மீள்விக்கப்பட்டது