தண்டோ அல்லாயார் மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°27′36″N 68°43′12″E / 25.46000°N 68.72000°E / 25.46000; 68.72000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டோ அல்லாயார் மாவட்டம்
ضلعو ٽنڊو الهيار
மாவட்டம்
சிந்து மாகாணத்தில் தண்டோ அல்லாயார் மாவட்டத்தின் அமைவிடம்
சிந்து மாகாணத்தில் தண்டோ அல்லாயார் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
தலைமையிடம்தண்டோ அல்லாயார் நகரம்
மக்கள்தொகை (2011 est.)[1]
 • மொத்தம்771,628
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
தாலுக்காக்கள்3
இணையதளம்Tando Allahyar Official webpage

தண்டோ அல்லாயார் மாவட்டம் (Tando Allahyar District) (சிந்தி மொழி: ضلعو ٽنڊو الهيار‎) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் ஐதராபாத் கோட்டத்தின் ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தண்டோ அல்லாயார் நகரம் ஆகும்.

வரலாறு[தொகு]

மீர் அல்லாயார் கான் தல்பூர் என்பவரால் 1804-இல் தண்டோ அல்லாயார் நகரமும், கோட்டையும் கட்டப்பட்டது. தண்டோ அல்லாயார் நகரத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அப்துல் ஜோ தரோ எனும் நினைவுச் சின்னங்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக தண்டோ அல்லாயார், சாம்பார் மற்றும் ஜாந்தோ மாரி என மூன்று வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் இருபது கிராம ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது. [2]

கல்வி[தொகு]

இம்மாவட்டத்தில் தாவூத் நினைவு பள்ளி, அரசு மாகாண உயர்நிலைப் பள்ளி, அரசு மேனிலைப் பள்ளி, அரசு சிந்தி நடுநிலைப் பள்ளி, அரசு எஸ். எம். ஆகா கான் பள்ளி, சுல்தானாபாத்; அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி முதலிய பல பள்ளிக் கல்வி நிறுவனங்கள் உள்ளது. ஆனால் பட்டப் படிப்புக்கான கல்வி நிலையங்கள் இம்மாவட்டத்தில் இல்லை.

பொருளாதாரம்[தொகு]

வேளாண்மைப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பியுள்ள இம்மாவட்டம் பல் வகை மாந்தோட்டங்களுக்கு புகழ் பெற்றது. மேலும் கரும்பு, கோதுமை, வெங்காயம், காய்கறிகள், ஆராஞ்ச், பருத்தி முதலிய பயிர்கள் விளைகிறது. இம்மாவட்டத்தில் ஒரு கரும்பாலை, பல விதைப் பண்ணைகள், இரண்டு பஞ்சாலைகள் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2010-ஆம் ஆண்டில் மதிப்பீட்டின் படி, தண்டோ அல்லாயார் மாவட்டத்தின் மக்கள் தொகை 5,75,000 ஆகும். மக்கள் தொகையில் 80.16% மக்கள் சிந்தி மொழியையும், 10.16% மக்கள் உருது மொழியையும், 4.26% பஞ்சாபி மொழியையும், 2% மக்கள் பலூச்சி மொழியையும், பிறர் மார்வாரி மொழி மற்றும் சராய்கி மொழிகளைப் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sindh population surges by 81.5 pc, households by 83.9 pc". Thenews.com.pk. 2 April 2012 இம் மூலத்தில் இருந்து 2015-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151017232747/http://www.thenews.com.pk/Todays-News-13-13637-Sindh-population-surges-by-81.5-pc,-households-by-83.9-pc. பார்த்த நாள்: 2016-12-26. 
  2. "District Government of Tando Allahyar". Archived from the original on 2013-05-21. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.

ஆதாரம்[தொகு]

  • 1998 District census report of Hyderabad. Census publication. 59. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.