தண்டு முனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தண்டு முனிவர் என்பவர் சிவபெருமானின் பக்தராகவும், பரத நாட்டியத்தின் முதல் ஆசானாகவும் கருதப்படுகிறார். சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரதவ முனிவர் நாட்டிய சாத்திரத்தினை சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். இதனால் பரதரின் பெயரைத் தாங்கி பரதநாட்டியம் என்று அழைக்கப்படுகிறது.

இவர் சிவபெருமானுக்கு நடனம் ஆடிக் காட்டுவதைப் போன்ற சிற்பம் பல்லவர் காலத்து மகாபலிபுரம் ரதக் கோயில்களில் உள்ளது. [1][2]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=571
  2. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=81
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டு_முனிவர்&oldid=2113752" இருந்து மீள்விக்கப்பட்டது