தண்டாயுதபாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டாயுதபாணி
இயக்கம்சரவண சக்தி
தயாரிப்புசி. என். ராஜதுரை
கதைசரவண சக்தி
இசைசுனில்
இ. எல். இந்திரஜித்
நடிப்புஎஸ். சுரேஷ் ராஜா
சிவானி சிறீ
ஒளிப்பதிவுஉருத்ரன்
படத்தொகுப்புபி. எஸ். வாசு
சலீம்
கலையகம்சிஎன்ஆர் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 27, 2007 (2007-04-27)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தண்டாயுதபாணி (Dhandayuthapani) 2007இல் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். சரவண சக்தி இதை இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகங்களான எஸ். சுரேஷ் ராஜா, சிவானி சிறீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் கே. ஜெயன், பாபி, சூரி, காதல் சுகுமார், இரஞ்சிதா, விஜி கெட்டி, பாலு ஆனந்த், மகாநதி சங்கர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். சி. என். ராஜதுரை தயாரித்த இப்படத்தில் சுனில் மற்றும் இ. எல். இந்திரஜித் இசையமைத்தனர். படம் 27 ஏப்ரல் 2007 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

சரவண சக்தி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் முன்னாள் உதவியாளராக இருந்தார். சி.என்.ஆர் பிலிம்ஸ் பதாகையின் கீழ் தண்டாயுதபாணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொழில் ரீதியாக மருத்துவராக இருக்கும் சி.என்.ராஜதுரை இந்த படத்தில் தயாரிப்பாளராக உருவெடுத்திருந்தார். எஸ்.சுரேஷ் ராஜா தண்டாயுதபாணி என்ற தலைப்பு வேடத்தில் நடித்தார். கேரளாவைச் சேர்ந்த வித்யா மோகன், சிவானி சிறீ என்றப் பெயரில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். சண்டைக் காட்சிகளை ஜாகுவார் தங்கம் இயக்கியுள்ளார். உருத்ரன் ஒளிப்பதிவையும், சுனில் மற்றும் இ.எல். இந்திரஜித் இசையமைப்பையும் செய்திருந்தனர். படத்தொகுப்பினை பி.எஸ்.வாசு மற்றும் சலீம் பொறுபேற்றிருந்தனர். இப்படம் முதன்மையாக நாகர்கோயில் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[3][4][5]

ஒலிப்பதிவு[தொகு]

தண்டாயுதபாணி
ஒலிப்பதிவு
சுனில் மற்றும் இ. எல். இன்ந்திரஜித்
வெளியீடு2006
ஒலிப்பதிவு2006
இசைப் பாணிதிரைப்பட இசை
நீளம்16:48
இசைத்தட்டு நிறுவனம்நியூ மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்சுனில்
இ. எல். இந்திரஜித்

திரைப்படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றை இசையமைப்பாளர்கள் சுனில் மற்றும் இ.எல் இந்திரஜித் மேற்கொண்டனர். ஒலிப்பதிவில் யோசி, தமிழமுதன் மற்றும் சரவண சக்தி ஆகியோர் எழுதிய நான்கு பாடல்கள் உள்ளன.[6][7][8]

வரவேற்பு[தொகு]

திரைப்படம் பாராட்டத்தக்க வரவேற்பைப் பெற்றது.[4][5]

குறிப்புகள்[தொகு]

  1. "Find Tamil Movie Dhandayuthapani". jointscene.com. Archived from the original on 31 January 2010. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  2. "Dhandayuthapani (2007)". nowrunning.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  3. Malini Mannath. "Dandayuthapani". chennaionline.com. Archived from the original on 13 December 2006. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  4. 4.0 4.1 "Making a life out of knife - Dhandayuthapani - Review". indiareel.com. Archived from the original on 22 October 2007. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  5. 5.0 5.1 Malini Mannath. "Dandayuthapani". chennaionline.com. Archived from the original on 16 July 2007. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  6. "Thandayuthapani (2006) - Indhrajith, Sunil". mio.to. Archived from the original on 6 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Dandayuthapani Songs". jiosaavn.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  8. "Thandayuthapani Songs". mymazaa.com. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டாயுதபாணி&oldid=3930628" இலிருந்து மீள்விக்கப்பட்டது