உள்ளடக்கத்துக்குச் செல்

தண்டர்போல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டர்போல்ட்

தண்டர்போல்ட் ( Thunderbolt ) என்பது கணினி மற்றும் பிற மின்னணு சாதனங்களில் தரவு பரிமாற்றம், காணொலி வெளிப்பாடு மற்றும் மின்சாரம் வழங்கும் வசதிகளை ஒரே இணைப்பில் வழங்கும் ஒரு வன்பொருள் இடைமுக நிறுவன குறியீட்டு பெயர் (brand name) ஆகும்.[1] இதை முதலில் இன்டெல் நிறுவனம் உருவாக்கியது, பின்னர் இதனை ஆப்பிள் நிறுவனம் இணைந்து பயன்படுத்த தொடங்கியது. தண்டர்போல்ட் வழியாக அதிவேகமாக தகவலை அனுப்பும் திறன் உள்ளதால், காணொளி மற்றும் ஒலி தொடர்பான பணிகளிலும், வெளிப்புற சேமிப்பு சாதனங்களிலும் பரவலாக பயன்படுகிறது. இதன் மூலம் ஒரே கம்பி வழியாக பல்வேறு செயல்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

தண்டர்போல்ட் 1 மற்றும் 2 வகைகள் ஒரே இணைப்பில் தரவு மற்றும் காணொளி பரிமாற்றத்தை மேற்கொண்டன. பின்னர் வந்த தண்டர்போல்ட் 3 வகை அதிவேகத்துடன் செயல்பட்டது. இது அகிலத் தொடர் பாட்டை சி ( யூ.எஸ்.பி சி ) வகை இணைப்பை அடிப்படையாகக் கொண்டது. தண்டர்போல்ட் 4 மேலும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகிறது. இந்த தொழில்நுட்பம் வெளிப்புற திரைகள், அதிக கொள்ளளவு கொண்ட சேமிப்பு சாதனங்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கருவிகளுடன் பரவலாக இணைக்கப்படுகிறது. தண்டர்போல்ட் 5 ஆனது 80 ஜிபிட்/வினாடி இருவழி வேகத்தையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shamah, David. "Thunderbolt 3: How USB cooperation could lead to 100 million connected computers soon". ZDNet. Retrieved 2021-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டர்போல்ட்&oldid=4330866" இலிருந்து மீள்விக்கப்பட்டது