தண்டர்போல்சு*
தண்டர்போல்சு* | |
---|---|
இயக்கம் | ஜாக் சிரேயர் |
தயாரிப்பு | கேவின் பிகே |
கதை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆண்ட்ரூ ட்ரோஸ் பலேர்மோ |
படத்தொகுப்பு |
|
கலையகம் | மார்வெல் காமிக்ஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 2, 2025 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
தண்டர்போல்சு* (ஆங்கிலம்: Thunderbolts*) என்பது திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் மார்வெல் வரைகதையில் தோன்றும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோசு தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் (எம்சியு) 36வது திரைப்படம் ஆகும்.
இந்த திரைப்படம் செபாஸ்டியன் இஸ்டான்,[1] டேவிட் கார்பர், வயாட் ராசூல், ஓல்கா குரிலென்கோ, லூயிஸ் புல்மேன், ஜெரால்டின் விஸ்வநாதன், கிறிஸ் பாயர், வெண்டெல் பியர்சு, கன்னா ஜான்-காமன் மற்றும் ஜூலியா லூயி-டிரெயிஃபஸ் ஆகியோரின் நடிப்பில், ஜாக் சிரேயர் இயக்கியுத்தில் மற்றும் எரிக் பியர்சன், லீ சங் ஜின் மற்றும் ஜோனா காலோ ஆகியோரின் எழுத்தில் உருவாக்கப்பட்டது.
2021 இல் மார்வெல் ஸ்டுடியோசு நிறுவனம் தண்டர்போல்சு* குழுவை மார்வல் திரைப் பிரபஞ்சத்திற்குள் உருவாக்குவதை கிண்டல் செய்யத் தொடங்கியது.[2] பின்னர் ஜூன் 2022 இல், ஜாக் சிரேயர் மற்றும் பியர்சன் இணைக்கப்பட்டபோது, படம் உருவாகி வருவதாகத் தெரியவந்தது. அதை தொடர்ந்து படத்தின் முக்கிய நடிகர்கள் செப்டம்பர் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூடுதல் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மார்சு 2023க்குள் படத்தின் திரைக்கதையை மீண்டும் எழுத லீ இணைந்தார்.
தண்டர்போல்சு* மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தில் ஒரு பகுதியாக மே 2, 2025 அன்று அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ D'Addario, Daniel (September 19, 2024). "Sebastian Stan Tells All: Becoming Donald Trump, Gaining 15 Pounds and Starring in 2024's Most Controversial Movie". Variety. Archived from the original on September 20, 2024. Retrieved September 22, 2024.
- ↑ Coggan, Devan (February 14, 2023). "Kevin Feige opens up about Phase 5, Kang, and the future of the MCU". Entertainment Weekly. Archived from the original on February 14, 2023. Retrieved February 14, 2023.
- ↑ Roxborough, Scott (May 16, 2024). "Imax Unveils 2025 Film Slate, Including 'Superman: Legacy' and 'The Fantastic Four'". The Hollywood Reporter. Archived from the original on May 16, 2024. Retrieved May 16, 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- 2025 திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- அமெரிக்க மீநாயகன் திரைப்படங்கள்
- மார்வெல் திரைப் பிரபஞ்சம்: ஐந்தாம் கட்டம்
- அமெரிக்க சாகச திரைப்படங்கள்
- அமெரிக்க கற்பனை திரைப்படங்கள்
- அமெரிக்க அறிபுனைத் திரைப்படங்கள்
- அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்
- அமெரிக்க நகைச்சுவை திரைப்படங்கள்
- தொடர் திரைப்படங்கள்
- வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்
- ஐமேக்ஸ் திரைப்படங்கள்