உள்ளடக்கத்துக்குச் செல்

தண்டபாணி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டபாணி
பிறப்புஏப்ரல் 17, 1943 (1943-04-17) (அகவை 82)
திண்டுக்கல், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு20 சூலை 2014 [1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–2014
வாழ்க்கைத்
துணை
அருணா
பிள்ளைகள்மகன்கள் : விமலாதித்தன்,
லெனின்குமார்,
மகள்: இராஜேஸ்வரி

தண்டபாணி (இறப்பு: சூலை 20, 2014) தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 150 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர, நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். காதல் திரைப்படத்தின் வாயிலாக காதல் தண்டபாணி என பரவலாக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தண்டபாணி திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர். பட்டியைச் சேர்ந்தவர். பொரி-கடலை வியாபாரம் செய்து வந்தார். 2004 ஆம் ஆண்டில் வெளியான காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதனால் இவர் "காதல்' தண்டபாணி எனவும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, வேலாயுதம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார். இறுதியாக காந்தர்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.[2]

மறைவு

[தொகு]

சென்னையில் வசித்துவந்த தண்டபாணி சண்டமாருதம் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது 2014 சூலை 20 அன்று மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 71 ஆகும். இவருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 20 July 2014 12:30 IST. "Popular Actor Kadhal Dhandapani Passes Away". Ibtimes.co.in. Retrieved 2014-07-21.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "நடிகர் ‛காதல் தண்டபாணி மாரடைப்பால் காலமானார்!". தினமலர். 20 சூலை 2014. Retrieved 21 சூலை 2014.
  3. "நடிகர் "காதல்' தண்டபாணி காலமானார்". தினமணி. 21 சூலை 2014. Retrieved 21 சூலை 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டபாணி_(நடிகர்)&oldid=4234080" இலிருந்து மீள்விக்கப்பட்டது